Gas Relief: அடிக்கடி உங்களுக்கு வயிற்றில் வாயு தொல்லையா..? ஆரோக்கிய செரிமானத்திற்கான குறிப்புகள்!
Foods That Cause Gas: பலருக்கும் வயிற்று வாயு ஒரு பொதுவான பிரச்சனை. பருப்பு வகைகள், சில காய்கறிகள், கார்பனேட்டட் பானங்கள், பால் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வாயுவை அதிகரிக்கும். மெதுவாக சாப்பிடுதல், போதிய அளவு தண்ணீர் குடித்தல், சமநிலை நார்ச்சத்து உட்கொள்ளல் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை வாயு பிரச்சனையைத் தடுக்க உதவும்.

பலருக்கும் உடலில் பல்வேறு உடல்நிலை பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சிலருக்கு துரித உணவுகள் சாப்பிட்டவுடன் வாந்தி போன்ற பிரச்சனையை சந்திக்கின்றனர். மேலும், இதுபோன்ற உணவுகளை சாப்பிடும்போது அடிக்கடி வாயு உருவாவது, வீக்கம் ஏற்படுவது, வயிற்றில் அசௌகரியம் ஏற்படுவது போன்றவை ஏற்படலாம். இது மாதிரியான சில உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுத்து வயிற்றில் வாயுவை உண்டாக்குகின்றன. வாயு உருவாகி (Stomach Gas) சில நாழிகையில் அமிலத்தன்மை, அஜீரணம் (Indigestion) போன்ற பிரச்சினைகளை வழிவகுக்கும். இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் எண்ணெய் அல்லது காரமான உணவுகளால் மட்டுமே வாயு ஏற்படுகிறது என்று நம்புகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் ஆரோக்கியமானதாகக் கருதப்படும் சில உணவுகள் கூட வாயுவை ஏற்படுத்தும்.
உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலமும், சரியான முறையில் சாப்பிடுவதன் மூலமும், குடிப்பதன் மூலமும் வாயு பிரச்சனையை பெருமளவில் தடுக்க முடியும். அதன்படி, வயிற்றில் ஏற்படும் வாயு பிரச்சனையை தடுக்க என்ன மாதிரியான உணவுகளை எடுக்கலாம்..? எடுக்கக்கூடாது..? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இயற்கையாக கல்லீரலை சுத்தப்படுத்துவது எப்படி ? இதை டிரை பண்ணுங்க!




பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ்:
பீன்ஸ், கொண்டைக்கடலை, பருப்பு போன்றவை நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தவை. ஆனால் இவற்றில் உள்ள சர்க்கரைகள் பண்புகள் ஒலிகோசாக்கரைடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை வயிற்றில் ஜீரணிக்க கடினமாகி வாயுவை ஏற்படுத்துகிறது.
வாயு உற்பத்தி செய்யும் காய்கறிகள்:
முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் ப்ராக்கோலியில் சல்பர், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்தின் போது வாயுவை உருவாக்குகிறது.
கார்பனேற்றப்பட்ட பானங்கள்:
சோடா, குளிர் பானங்கள் மற்றும் எனர்ஜி ட்ரிங்ஸ் போன்றவை கார்பன் டை ஆக்சைடு வாயுவால் நிரம்பியுள்ளது. இது வயிற்றில் வாயுவை நேரடியாக அதிகரிக்க செய்கிறது.
பால் பொருட்கள்:
லாக்டோஸ் பிரச்சனை உங்களுக்கு சேராது என்றால், பால், சீஸ் மற்றும் ஐஸ்கிரீமை ஜீரணிக்க சிரமத்தை சந்திப்பீர்கள். இது மேலும் உங்கள் வயிறு வீக்கத்தை தரும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவு:
பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், பர்கர்கள், பீட்சா மற்றும் எண்ணெய் உணவுகளில் சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், இவை செரிமானத்தை மெதுவாக்கி வாயுவை உண்டாக்குகின்றன.
ALSO READ: கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் மட்டும் பாதிக்காது – இந்த பிரச்னைகளும் ஏற்படலாம்
வாயுவைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள்:
உணவை மெதுவாக உண்ணுங்கள்
வேகமாக சாப்பிடுவதால் காற்று வயிற்றுக்குள் சென்று வாயு உருவாவதற்கு வழிவகுக்கிறது.
சரியான நேரத்தில் தண்ணீர் குடிக்கவும்
சாப்பிட்ட உடனேயே அதிகமாக தண்ணீர் குடிக்காதீர்கள். இது செரிமான செயல்முறையை மெதுவாக்கும்.
சமநிலை நார்ச்சத்து
உடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து முக்கியமானது. ஆனால் திடீரென்று அதன் அளவை அதிகரிப்பது வாயுவை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி
சாப்பிட்ட பிறகு லேசான நடைப்பயிற்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது வாயு உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.