Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Heart Disease Prevention: சமையல் எண்ணெய் எப்படி இதய நோய் பிரச்சனையை அதிகரிக்கிறது? மாரடைப்புக்கான 5 முக்கிய அறிகுறிகள்!

Unhealthy Cooking Oils: இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமற்ற சமையல் எண்ணெய் பயன்பாடு இதய நோய்களுக்கு முக்கிய காரணம். டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய்கள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன. மார்பு வலி, மேல் உடல் அசௌகரியம் போன்றவை மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் ஆகும்.

Heart Disease Prevention: சமையல் எண்ணெய் எப்படி இதய நோய் பிரச்சனையை அதிகரிக்கிறது? மாரடைப்புக்கான 5 முக்கிய அறிகுறிகள்!
மாரடைப்புக்கான அறிகுறிகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Aug 2025 17:52 PM

இன்றைய நவீன காலகட்டத்தில் இதய நோய்களால் (Heart Disease) பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்களிடையே இதய நோய் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நமது ஆரோக்கியமற்ற சமையல் எண்ணெய் (Cooking Oil). ஆரோக்கியமற்ற சமையல் எண்ணெயை உட்கொள்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது மக்களிடையே மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது அதன்படி, திடீர் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் கெட்ட ஆரோக்கியமற்ற எண்ணெய்கள் உள்ளது. இத்தகைய எண்ணெய்களில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இந்த எண்ணெயை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துகொள்ளும்போது இதயத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. இதய நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

மாரடைப்புக்கான 5 ஆரம்ப அறிகுறிகள்:

மார்பு வலி

யாருக்காவது கடுமையாக மார்பு அசௌகரியத்தை உணர்ந்தால், இந்த அறிகுறியை ஆபத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வலி மற்றும் அழுத்தம் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

ALSO READ: உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகளை டிரை பண்ணுங்க!

மேல் உடலில் அசௌகரியம்

உடலின் மேல் பகுதியில் அதாவது கைகள், முதுகு, தாடை மற்றும் வயிற்றில் வலியை யாராவது உணர்ந்தால், இதுவும் மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகும்.

சுவாசிப்பதில் சிரமம்

ஆரோக்கியமற்ற சமையல் எண்ணெய் உடலில் கெட்ட கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சில நேரங்களில் இதயத்தின் நரம்புகளில் அடைப்பு ஏற்படுகிறது. இது இதயத்தில் கனமான உணர்வை ஏற்படுத்துகிறது. இது படிப்படியாக சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

தலைச்சுற்றல்

எந்த காரணமும் இல்லாமல் யாராவது தலைச்சுற்றலை உணர்ந்தால், அதை எக்காரணத்தை கொண்டும் புறக்கணிக்கக்கூடாது. இது குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படலாம். இது அதிகமாக எண்ணெய் உட்கொள்வதால் ஏற்படும் மற்றொரு பிரச்சனையாகும். தலைச்சுற்றல் மாரடைப்புக்கு முந்தைய அறிகுறியாகும்.

வியர்வை

ஒருவர் பிரைடு ரைஸ் போன்ற வறுத்த உணவை அதிகமாக சாப்பிடும்போது, ​​அவர்களின் உடலில் வெப்ப அளவு அதிகரிக்கிறது. இந்த வெப்பம் காரணமாக, அவர்களுக்கு அதிகப்படியான வியர்வை பிரச்சனையும் ஏற்படுகிறது. இதற்குப் பின்னால் உள்ள காரணம், இதயத்தில் இரத்த ஓட்டம் மிகவும் மெதுவாகிறது என்று அர்த்தம். இதன் காரணமாக உடல் நிறைய வியர்வையை வெளியிடத் தொடங்குகிறது.

ALSO READ: தூங்கும்போது படுக்கையருகே ஸ்மார்ட்போனா..? தூக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து!

என்ன செய்யலாம்..?

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்குப் பதிலாக சமையலுக்கு வேர்க்கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். சமையலறையில் முடிந்தவரை சிறிய அளவிலான எண்ணெயைப் பயன்படுத்துங்கள். எண்ணெயை ஒருமுறை பயன்படுத்தியபின் மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். உங்கள் எண்ணெய் பாட்டிலின் லேபிளை சரிபார்க்கவும்.