Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Women Health: மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியா..? இந்த பொருட்கள் வலியை குறைக்கும்!

Periods Home Remedy: மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு இடுப்பு, வயிறு மற்றும் தொடைகளில் கடுமையான வலி, மனநிலை மாற்றங்கள், சோர்வு, பலவீனம், மன உளைச்சல்கள் மற்றும் எண்ணற்ற பிற விஷயங்கள் ஏற்படும். சில நேரங்களில் வலி தாங்க முடியாத அளவுக்கு இருக்கும்.

Women Health: மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியா..? இந்த பொருட்கள் வலியை குறைக்கும்!
ப்ரீயட்ஸ் வலிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Sep 2025 15:34 PM IST

மாதவிடாய் (Menstrual) என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் வேதனையான மற்றும் சவாலான காலக்கட்டங்களில் ஒன்றாகும். இந்த 3 முதல் 5 நாட்கள் நம்பமுடியாத அளவிற்கு வலியை கொடுக்கும். இந்த நேரத்தில் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு இடுப்பு, வயிறு மற்றும் தொடைகளில் கடுமையான வலி, மனநிலை மாற்றங்கள் (Hormonal Imbalance), பலவீனம், மன உளைச்சல்கள் மற்றும் எண்ணற்ற பிற விஷயங்கள் ஏற்படும். சில நேரங்களில் வலி தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்கள் மாதவிடாய் சுழற்சியை சிறிது எளிதாக்க சில பயனுள்ள சமையலறை பொருட்கள் உதவும். பெண்ணாக இருந்தால் ஒரு டீஸ்பூன் சுத்தமான நெய் கலந்த வெதுவெதுப்பான நீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும். அதேபோல், மாதவிடாய்க்கு 3 நாட்களுக்கு முன்பும், அதன்போது 3 நாட்களும் குடிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, சுத்தமான நெய்யுடன் கலந்த வெதுவெதுப்பான நீரை 6 நாட்கள் குடிப்பதால், மாதவிடாய் தொடர்பான பல பிரச்சனைகள் நீங்கும்.

ALSO READ: மாதவிடாய் தாமதமானால் கர்ப்பமா..? இதற்கு சில பிரச்சனைகளும் காரணம்!

மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய பொருட்கள்:

எள்:

எள் விதைகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக அறியப்படுகின்றன. குளிர்காலத்தில் எள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக பெரியவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். அதன்படி, பெண்கள் மாதவிடாய் காலத்தில் எள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மருத்துவ நிபுணர்களும் எள் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஒரு அருமருந்து என்று கூறுகிறார்கள். எள் விதைகளில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அவை வெப்பமயமாதல் பண்புகளைக் கொண்டுள்ளன. அதனால்தான் அவை ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினைகளைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் முதல் 3-4 நாட்களுக்கு எள் சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எள் இரத்தப்போக்கை சீராக்க உதவுகின்றன. அவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.

உளுந்து:

மாதவிடாய்க்குப் பிறகு 10 நாட்களுக்கு உளுந்தை உட்கொள்ள வேண்டும். உளுந்தை வடை, தோசை மற்றும் கஞ்சி வடிவத்தில் எடுத்து கொள்ளலாம். உளுந்தானது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி பிரச்சனையை சரிசெய்யும். உளுந்தில் புரதம் நிறைந்துள்ளதால், இது கரு முட்டையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

ALSO READ: தைராய்டு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. இதை சாப்பிட்டால் கட்டுப்படுத்துவது கடினம்!

வெந்தயம்:

வெந்தயம் 5 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தயம் கருப்பையை பலப்படுத்துகிறது. இது அதிக இரத்தப்போக்கைத் தடுக்கிறது. வழக்கமான உணவு சுழற்சி உடலை வலுவாக வைத்திருக்கிறது. இது ஹார்மோன் சமநிலையையும் பராமரிக்கிறது. எள்ளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதன் உதவியுடன், உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் கருப்பை சுருக்கங்களைத் தூண்டுகிறது. இதில் உள்ள துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.