Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: 35 வயதை கடந்த பெண்களா நீங்கள்..? பலவீனமடைய தொடங்கும் எலும்புகள்! சரி செய்ய என்ன செய்யலாம்?

Strong Bones for Women: பெண்கள் வயதானவுடன், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் எலும்பு வலிமையைப் பாதிக்க செய்கின்றன. இதற்கு, சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம். பெண்கள் இளம் வயதிலேயே எலும்புகளை வலுப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.

Health Tips: 35 வயதை கடந்த பெண்களா நீங்கள்..? பலவீனமடைய தொடங்கும் எலும்புகள்! சரி செய்ய என்ன செய்யலாம்?
வலுவான எலும்புகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Sep 2025 17:41 PM IST

35 வயதிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் (Bones) பலவீனமடையத் தொடங்குகின்றன. இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், இதை ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் இயற்கையான செயல்முறையாகும். பெண்கள் வயதானவுடன், ஹார்மோன் மாற்றங்கள் (Hormonal Changes) மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் எலும்பு வலிமையைப் பாதிக்க செய்கின்றன. இதற்கு, சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம். பல பெண்கள் இந்தப் பிரச்சினையை சாதாரண விஷயம் என்று புறக்கணிக்கிறார்கள். இருப்பினும், இதை எக்காரணத்தை கொண்டும் புறக்கணிக்கக்கூடாது. ஏனென்றால், பெண்கள் இளம் வயதிலேயே எலும்புகளை வலுப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம். இல்லையெனில், பின்னர் இன்னும் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பெண்கள் எலும்பை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

எலும்புகள் ஏன் பலவீனமடைகின்றன?

பெண்களின் எலும்புகள் பலவீனமடைவதற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடுதான் மிகவும் பொதுவான காரணம். இந்த ஹார்மோனோ எலும்பு வலிமையைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. 35 வயதிற்குப் பிறகு , ஈஸ்ட்ரோஜன் அளவுகள் படிப்படியாகக் குறைந்து, எலும்பு கால்சியம் இழப்பு மற்றும் எலும்பு முறிவுகளின் அபாயத்தை அதிகரிக்கும். அதன்படி, எலும்பு வலிமைக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. எலும்பு வலிமையை பராமரிக்க பால், தயிர், சீஸ், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தினசரி வாழ்க்கையில் எடுத்து கொள்ள வேண்டும். மேலும், தினமும் 10 நிமிடங்கள் வெயிலில் நடப்பது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது போன்றவற்றையும் பழக்கவழக்கங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தி எலும்பு அடர்த்தியை பராமரிக்க பெரிதும் உதவுகின்றன.

ALSO READ: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது..? மருத்துவர் கூறும் அட்வைஸ்!

எலும்பு வலிமையின் ரகசியம்

உணவுமுறை மட்டுமே எலும்புகளை வலுவாகப் பராமரிக்க உதவாது. தினமும் விறுவிறுப்பான நடைபயிற்சி, யோகா போன்ற லேசான பயிற்சிகளும் எலும்புகளை வலுப்படுத்துகின்றன. இவை தசை வலிமையையும் அதிகரிக்கவும், எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவி செய்யும்.

இந்த பழக்கங்களை மாற்றுவதும் முக்கியம்..

பெண்களில் யாருக்கேனும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் கைவிடுவது முக்கியமானது. தொடர்ந்து, சீரான மற்றும் சத்தான உணவுகளை எடுத்து கொள்வது எலும்பு பலவீனத்தை சரி செய்யும். எலும்பு பலவீனத்தை சரியான நேரத்தில் கண்டறிய மருத்துவரின் ஆலோசனைபடி, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வதும் முக்கியமானது. இது போன்ற சிறிய பழக்கவழக்கங்களை மேற்கொள்வது நீண்ட காலத்திற்கு எலும்புகளைப் பாதுகாத்து வாழ்க்கையை சுறுசுறுப்பாக்க உதவி செய்யும்.

ALSO READ: மாதவிடாய்க்கு முன் பெண்கள் ஏன் சோர்வாக உணர்கிறார்கள்? காரணங்களும்.. தீர்வுகளும்..!

35 வயதிற்குப் பிறகு எலும்பு பலவீனம் ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஆனால் இது தவிர்க்க முடியாதது அல்ல . பெண்கள் சரியான உணவுமுறை , தினசரி உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் வலுவான எலும்புகளைப் பராமரிக்க உதவும்.