Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Intermittent Fasting Dangers: எடையை குறைக்க கடுமையாக டயட் பிளானா..? அதிகரிக்கும் இதய நோய் ஆபத்துகள்!

Extreme Dieting Health Risks: இன்றைய காலகட்டத்தில் பலர் எடை குறைப்புக்காக நீண்ட நேர நோன்பை மேற்கொள்கின்றனர். ஆனால், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியான ஆய்வு, இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது. ஆரோக்கியமான எடை குறைப்புக்கு மருத்துவ ஆலோசனை அவசியம்.

Intermittent Fasting Dangers: எடையை குறைக்க கடுமையாக டயட் பிளானா..? அதிகரிக்கும் இதய நோய் ஆபத்துகள்!
உடல் எடை குறைப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Aug 2025 15:01 PM

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலரும் பெரியளவில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது கிடையாது. இதனால், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இந்த எடையை குறைக்க (Weight Loss) யூடியூப்பில் யாரோ சொல்வதை நம்பி டயட், உடற்பயிற்சி என சாப்பிடாமல் உண்ணாவிரதம் (Fasting) இருக்கிறார்கள். ஆனால், இந்த முறை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு இது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆய்வு என்ன சொல்கிறது..?

ஆய்வின்படி, தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் இறக்கும் அபாயமும் உண்டாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வு பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில், நீண்ட காலமாக உணவு உட்கொள்ளாமல் டயட் பாலோ செய்பவர்களுக்கு உடலில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டது.

டயட் என்ற பெயரில் மக்கள் 16 மணிநேரம் உண்ணாவிரதம் அல்லது 8 மணிநேரம் கடுமையான உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்கள். இது உடல் கொழுப்பை விரைவாகக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது என்று பெரும்பாலோனோர் நம்புகிறார்கள். ஆனால், இது முறையாகவோ அல்லது நீண்ட காலமாகவோ மேற்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.

ALSO READ: சலூனில் தலைமுடியை அலசும்போது கவனம்! ஆபத்தை தரும் பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம்..!

என்ன சேதம் ஏற்படும்..?

  • குறைந்த நேர வரம்புகளுக்குள் சாப்பிடுவது உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தரும். இது உடலுக்கு தேவையான நேரத்தில் உங்களுக்கு கிடைக்காதபோது ஊட்டச்சத்து குறைபாடுகள் உண்டாகும்.
  • சரியான முறையில் டயட் இல்லாமல் நீண்ட காலமாகப் பின்பற்றுவது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
  • சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவுகள் திடீரென உயரலாம் அல்லது குறையலாம். இது இரத்த சர்க்கரையை உடலில் தொல்லைகளை தரும்.
  • தொடர்ந்து பசியுடன் இருப்பது மனநிலை ஊசலாட்டம், எரிச்சல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மன ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாகும்.

ALSO READ: இளம் வயதிலேயே எலும்பு பலவீனம்.. எலும்பு தேய்மானத்தின் காரணங்களும், தீர்வுகளும்..!

எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்..?

  • மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்தலின்படி உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம்.
  • நீண்ட நேரம் தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பது உடலில் பல பிரச்சனையை உண்டாக்கும், சோர்வை தரும். எனவே, சரியான அளவில் சரியான நேரத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை எடுத்து கொள்வது முக்கியம்.
  • உங்கள் உணவில் ஆரோக்கியமான உணவு, போதுமான தண்ணீர் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கவும்.
  • உடலில் ஏதேனும் பிரச்சனைகள் எழுந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.
  • தொடர்ந்து, சாப்பிடாமல் இருப்பது அனைவருக்கும் நன்மை தராது. இது சிலருக்கு நன்மை பயக்கும் என்றாலும், நீண்ட காலமாக அதைப் பின்பற்றுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. நீங்களும் அதைப் பின்பற்ற நினைத்தால், நிச்சயமாக ஒரு முறை நிபுணர் ஆலோசனையைப் பெறுங்கள்.