Health Tips: சலூனில் தலைமுடியை அலசும்போது கவனம்! ஆபத்தை தரும் பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம்..!
Beauty Parlor Stroke Syndrome: அழகு நிலையங்களில் தலை சாய்த்து ஷாம்பூ செய்வதால் ஏற்படும் அரிய 'பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம்' குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. மோசமான தலை சாய்த்து அலசும்போது கழுத்தில் ஏற்படும் அழுத்தம் மூளைக்கு இரத்த ஓட்டத்தை பாதித்து பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

தலைமுடி (Hair) மற்றும் முகத்தை அழகாக்க நாம் செல்லும் சலூன்கள் பெரும்பாலும் நமக்கு உடல் அளவிலும், மனதளவிலும் நல்ல உணர்வை தரும். இது நம் மீதான தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். ஆனால், பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் (Beauty Parlor Stroke Syndrome) எனப்படும் ஒரு அரிய நிலையை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு பியூட்டி பார்லர் நிபுணர்கள், கடைகளுக்கு வரும்போது தலையை சாய்த்து ஷாம்பூ (Shampoo) பயன்படுத்துவார்கள். இது அவர்களுக்கு கழுத்து மற்றும் முதுகில் அழுத்தத்தை கொடுத்து கடுமையான உடல்நல அச்சுறுத்தலாக மாறுவதுதான் பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் ஆகும்.
பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் எப்படி ஏற்படுகிறது..?
பியூட்டி பார்லரில் எப்படி இப்படியான பிரச்சனைகள் ஏற்படும் என்று உங்களுக்கு எழுந்தால், அதற்கான பதிலை இங்கே கொடுக்கிறோம். பல சலூன்களில் முடி வெட்டியபிறகு, கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் பேக்வாஷ் பேசின்களில் நாம் சாய்ந்து படுக்கும்போது மோசமான கோணத்தில் கழுத்தை அழுத்தியவாறு படுப்போம். இது கழுத்து வலி, காயம் மற்றும் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தான பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் முதன்முதலில் கடந்த 1993ம் ஆண்டு அமெரிக்க நரம்பியல் நிபுணர் மைக்கேல் வெயிண்ட்ராப் என்பவரால் கண்டறியப்பட்டது. அதில், தனது நோயாளிகள் பிரச்சனையால் பாதிக்கப்படுவதற்கு முன்பு, பியூட்டி பார்லரில் தலைமுடியை ஷாம்பு செய்த பிரகு, கடுமையான பக்கவாதம் தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டதை கண்டறிந்தார்.




ALSO READ: பின்னோக்கி நடக்கும் பயிற்சி பற்றி தெரியுமா? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பக்கவாதம் என்றால் என்ன..?
பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் திடீரென ஏற்படும் குறைபாட்டால் ஏற்படும் மூளை தாக்குதலாகும். இது பொதுவாக இரத்த உறைவிலிருந்து ஏற்படும் அடைப்பு அல்லது மூளையில் உள்ள ஒரு பெரிய இரத்த நாளம் கிழிந்து வெடிப்பதால் ஏற்படுகிறது. இதனால் ஆக்ஸிஜன், குளுக்கோஸ், ஊட்டச்சத்துகள் போன்றவை குறைவதால் மூளை செல்கள் சேதமடைய தொடங்கும்.
ஷாம்பு கொண்டு வாடிக்கையாளர்களின் தலையை அலசும்போது பெரும்பாலும், வாஷ்பேசினின் விளிம்பில் அதிகமாக அழுத்ததை கொடுப்பது பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோமின் முதன்மையாக காரணம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
கழுத்தில் ஏற்படும் அசாதாரண கழுத்து நிலை, கழுத்து சுழற்சி அல்லது திடீர் அசைவுகள், கழுத்துப் பகுதியைச் சுற்றியுள்ள மேல் முதுகெலும்பு நெடுவரிசையின் முதுகெலும்புகள் மூளையின் பின்புறம் மற்றும் கீழ் பகுதிக்கு இரத்தத்தை வழங்கும் முக்கிய இரத்த நாளங்களில் ஒன்றின் மீது அழுத்தம் கொடுக்க காரணமாகின்றன. இதனால், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ALSO READ: எடை குறைப்பது முதல் சகிப்புத்தன்மை வரை … படிக்கட்டில் ஏறி, இறங்குவது இவ்வளவு நன்மைகளா?
பக்கவாதம் பெரும்பாலும் வயதானவர்களுக்கும், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது அதிக கொழுப்பு போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அதிகளவில் ஏற்படும். ஆனால், இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமான மக்களும் கூட பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றன.
பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோமை தடுக்க என்ன செய்யலாம்..?
பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் வராமல் தடுக்க வேண்டுமென்றால், பேக்வாஷ் சிங்க்கைப் பயன்படுத்தும்போது வலி மற்றும் அசௌகரியத்தை உணர்ந்தால், உடனடியாக எழுந்து கழுத்திற்கு ஓய்வு கொடுங்கள். அப்படி இல்லையென்றால், கழுத்தை வலமும், இடமும் திருப்பி சிறிது பயிற்சி கொடுங்கள்.
தலைமுடியை கழுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உங்கள் கழுத்திற்கு அடியில் அழுத்தம் ஏற்படாமல் இருக்க துண்டு போன்றவற்றை வைக்கலாம். இது அழுத்தத்தை குறைக்கும்.