Health Tips: மாதவிடாய்க்கு முன் பெண்கள் ஏன் சோர்வாக உணர்கிறார்கள்? காரணங்களும்.. தீர்வுகளும்..!
Premenstrual Fatigue: மாதவிடாய் வருவதற்கு முன் பெண்கள் அனுபவிக்கும் சோர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மை, நீர்ச்சத்து குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும். சீரான உணவு, போதுமான நீர்ச்சத்து, போதுமான ஓய்வு, யோகா அல்லது உடற்பயிற்சி மூலம் இந்த சோர்வைத் தடுக்கலாம்.

பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் வயதுக்கு வந்தபிறகு, பெண்கள் மாதம் மாதம் மாதவிடாயை (Menstrual) எதிர்கொள்கின்றனர். பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், மனநிலை மாற்றங்கள், வீக்கம் மற்றும் கால் வலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் மாதவிடாய் காலத்தில் பொதுவானவை. இந்த நேரத்தில், சில பெண்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் (Energy Boost) உணர்கிறார்கள். மாதவிடாய் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கிறது. இதன் காரணமாக, சில பெண்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்கிறார்கள். இது மட்டுமல்லாமல், சில பெண்கள் மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பே சோர்வாக உணர ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இதற்கான காரணம் உங்களுக்குத் தெரியுமா?
மாதவிடாய்க்கு முன் ஏற்படும் சோர்வு பிரச்சனை மாதவிடாய்க்கு முந்தைய சோர்வு என்று அழைக்கப்படுகிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பே இந்தப் பிரச்சனை ஏற்படத் தொடங்குகிறது. இந்தப் பிரச்சனை ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் குறைவதால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. போதுமான தூக்கமின்மை, நீரிழப்பு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் அதிகரித்த மன அழுத்தம் ஆகியவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், பெண்கள் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள்.
ALSO READ: கர்ப்ப காலத்தில் டீ குடிப்பது எவ்வளவு பாதுகாப்பானது? ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ குடிக்கலாம்..?




இந்த பிரச்சனையை வராமல் தடுப்பது எப்படி..?
மாதவிடாய்க்கு முந்தைய வலி பிரச்சனையிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும். மாதவிடாய்க்கு முந்தைய வலி ஏற்படுவதைத் தவிர்க்க, உங்கள் உணவை சீரான முறையில் வைத்திருங்கள். இதற்காக, உங்கள் உணவில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் புரதம் ஆகியவற்றை சேர்க்கவும். இது ஆற்றல் அளவைப் பராமரித்து, சோர்வு ஏற்படுவதை தவிர்க்கும். நீர்ச்சத்து குறைபாடு பலவீனத்தையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. இதற்காக, எப்போதும் நீர்ச்சத்தை பராமரிக்கவும். அதன்படி, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், உணவில் அதிக திரவம் உள்ள உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஆற்றல் அளவைப் பராமரித்து பலவீனத்தை ஏற்படுத்தாது.
ALSO READ: பெண் கருவுறாமைக்கு இதுதான் முக்கிய காரணங்களா..? அதை எவ்வாறு தடுப்பது?
மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பெண்களுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. இதனால் அவர்களின் தூக்கச் சுழற்சியும் மோசமடையத் தொடங்குகிறது. அதன்படி, இதுவும் உடலில் பலவீனம் மற்றும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. மாதவிடாய் காலத்தில் சோர்வு போன்றவை ஏற்படாமல் இருக்க, கிடைக்கும் நேரத்தில் ஓய்வெடுங்கள், போதுமான அளவு தூக்கத்தை எடுத்து கொள்ளுங்கள். மாதவிடாய் காலங்களில் உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க, தினமும் யோகா அல்லது நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளைச் செய்யுங்கள். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சோர்வைக் குறைக்கிறது.