Women’s Health: பெண்களே கவனம்! இந்த பொருட்கள் ஹார்மோன் சமநிலையின்மையை உண்டாக்கும்!
Hormonal Imbalance in Women: பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மை பல காரணிகளால் ஏற்படுகிறது. பிபிஏ, பிசிஏஏ, மைக்ரோபிளாஸ்டிக்ஸ், வாசனை திரவியங்கள் போன்றவை ஹார்மோன் சமநிலையை பாதிக்கின்றன. BCAA சப்ளிமெண்ட்ஸ் அதிக அளவில் உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மிகவும் முக்கியம்.

ஒவ்வொரு பெண்ணின் (Women’s Health) ஆரோக்கியமும் மனநிலையும் வயதுக்கு ஏற்ப மாறுகிறது. இது இங்கு பலருக்கு இது தெரியாது. ஹார்மோன் சமநிலையின்மை (Hormonal Imbalance) என்பது உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும் ஒரு நிலை. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் பத்து பெண்களில் ஒருவர் ‘ஹார்மோன் சமநிலையின்மையால்’ பாதிக்கப்படுகிறார். ஜிம் சப்ளிமெண்ட்ஸ் முதல் தோல் பராமரிப்பு பொருட்கள் வரை, பிபிஏ, பிசிஏஏ, மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் வலுவான வாசனை திரவியங்கள் போன்ற பொருட்கள் ஹார்மோன் ஆரோக்கியத்தை சீர்குலைத்து கருவுறுதலை பாதிக்கலாம்.
காலப்போக்கில் கருவுறுதல் குறைய வாய்ப்புள்ளதா?
நிபுணர்களின் கூற்றுப்படி, BCAA சப்ளிமெண்ட்ஸ் ஜிம் செல்பவர்களிடையே மிகவும் பிரபலமானவையாகவும் பொதுவானவையாகவும் மாறிவிட்டது. ஆச்சரியப்படும் விதமாக, இதை அதிகமாக உட்கொள்வது பெண்களில் இன்சுலின் சமநிலையையும் அண்டவிடுப்பையும் சீர்குலைக்கும். வாசனையுள்ள கிரீம்கள் மற்றும் லோஷன்களில் பெரும்பாலும் பித்தலேட்டுகள் மற்றும் பாராபென்கள் உள்ளன. இவை ஹார்மோன்களை சீர்குலைக்கின்றன. குறிப்பாக சூடான பிளாஸ்டிக்கை அடிக்கடி பயன்படுத்துவது காலப்போக்கில் கருவுறுதலைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
ALSO READ: கண்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வது அவசியம்
பெண்களின் ஹார்மோன்களை சீர்குலைக்கும் ‘இந்த’ விஷயங்கள்..
நிபுணர்களின் கூற்றுப்படி, வாசனை திரவியங்கள், டியோடரண்டுகள், ஷாம்புகள், பொம்மைகள் மற்றும் உணவுப் பாத்திரங்களில் கூட பித்தலேட்டுகள் காணப்படுகின்றன. பித்தலேட்டுகள் ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கின்றன. அதேபோல், பெண்களில் முட்டையின் தரத்தைக் குறைக்கின்றன. இது கர்ப்ப காலத்தில் கருவுறுதல் குறைதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
நீங்கள் எதை கவனித்துக் கொள்ள வேண்டும்?
உங்கள் ஹார்மோன் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாசனை திரவியம் இல்லாத பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எஃகு தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்துவது நல்லது. இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
ALSO READ: கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் மட்டும் பாதிக்காது – இந்த பிரச்னைகளும் ஏற்படலாம்
ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அவற்றி லேபிள்களைப் படித்து BCAA தயாரிப்புகளை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகவும். பிளாஸ்டிக் கொள்கலன்களில் சூடாக இருக்கும் உணவுகளை அடைத்து, அதை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.வெயில் காலமாக இருந்தாலும் சரி, மழை காலமாக இருந்தாலும் சரி முடிந்தவரை நீரேற்றத்துடன் இருங்கள். எப்போது சாப்பிட்டாலும், துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள்.