Menstrual Health: மாதவிடாய் காலத்தில் ஊறுகாய் சாப்பிடக் கூடாதா? தவிர்க்க 5 காரணங்கள் இதோ!
Pickles During Periods: பெண்களின் மாதவிடாய் காலத்தில் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. இந்த நேரத்தில் ஊறுகாயை உண்பது வயிற்று வலி, வீக்கம், நீர் தேக்கம், பலவீனம் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும். ஊறுகாயில் உள்ள அதிக உப்பு மற்றும் எண்ணெய், செரிமான மண்டலத்தை பாதித்து, நிலைமையை மோசமாக்கும்.

பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் பிரச்சனையை (Periods) எதிர்கொள்கிறார்கள். ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் 3 முதல் 4 நாட்களில் நின்றுவிடும். அதேநேரத்தில், ஒரு சில பெண்களுக்கு 5 நாட்கள் வரை செல்லும். இதனால் ஏற்படும் வலியை ஒரு சில பெண்கள் தாங்கி கொள்வார்கள். சிலருக்கு அதிக இரத்தப்போக்கு பிரச்சனை ஏற்பட்டு, அதிக வலியை கொடுக்கும். மாதவிடாய் காலத்தில், பெண்களின் உடலில் பல சிறிய மற்றும் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதற்காக, நீங்கள் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எனவே, நீங்கள் மாதவிடாய் காலத்தில் (Menstrual Health) ஊறுகாய் சாப்பிட்டால், முதலில் அதை நிறுவது நல்லது. அந்தவகையில், மாதவிடாய் காலத்தில் ஊறுகாய் (Pickles) சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
மாதந்தோறும் மாதவிடாய் காலத்தில் ஊறுகாயை சாப்பிடக்கூடாது. அவ்வாறு செய்வது நிலைமையை மோசமாக்கும். இந்த நேரத்தில் ஊறுகாயை சாப்பிட்டால், வயிற்று வலி பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.
ALSO READ: காலையில் எழுந்ததும் முதலில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன? ஆயுர்வேத மருத்துவர்கள் அறிவுரை




உடலில் வீக்கம்:
மாதவிடாய் காலத்தில், பெண்கள் பொதுவாக வயிற்று வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, இந்த நேரத்தில் ஊறுகாயை சாப்பிட்டால், இந்த பிரச்சனை அதிகரிக்கலாம். ஊறுகாயில் அதிக அளவு எண்ணெய் மற்றும் உப்பு இருப்பதால், இந்த பிரச்சனை அதிகரிக்கும். இதன் காரணமாக, வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
நீர் தேக்கம்:
ஊறுகாய் தயாரிக்கும் போது அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் ஊறுகாயை சாப்பிட்டால், உப்பு உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்தும். இது வயிற்றில் கனத்தை ஏற்படுத்தும். இப்படியாக உடலில் நீர் தேங்குவதால், வயிறு வீங்கி, மந்தம் அல்லது வயிற்றில் குத்தல் போன்றவை ஏற்படும்.
பலவீனம்:
ஊறுகாயில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் சில பெண்களுக்கு அமிலத்தன்மை மற்றும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும். உங்கள் மாதவிடாய் காலத்தில், உங்கள் செரிமான அமைப்பு பலவீனமடையக்கூடும். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் காரமான உணவுகளை உட்கொண்டால், இந்த பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.
ALSO READ: தைராய்டு நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.. இது பிரச்சனையை அதிகரிக்கும்..!
முகப்பரு பிரச்சனை:
மாதவிடாய் காலத்தில் ஊறுகாயை அதிகமாக சாப்பிட்டால், முகப்பரு பிரச்சனை அதிகரிக்கலாம். ஊறுகாய் காரமாகவும் எண்ணெய் பசையுடனும் இருப்பதால், இந்தப் பிரச்சனை அதிகளவில் அதிகரிக்கக்கூடும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)