Pregnancy Toilet Safety: கர்ப்ப காலத்தில் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது பாதுகாப்பானதா..? இல்லையா..?
Indian Toilets During Pregnancy: கர்ப்ப காலத்தில் இந்திய கழிப்பறையைப் பயன்படுத்துவது குறித்த சர்ச்சைகள் உள்ளன. சிலர் இது இடுப்புத் தசைகளை வலுப்படுத்த உதவும் எனக் கூறுகின்றனர், மற்றவர்கள் கருச்சிதைவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர். முந்தைய கருச்சிதைவு அல்லது கர்ப்ப சிக்கல்கள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

தாயாகும் முறை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான காலமாகும். உங்கள் வீட்டிலுள்ள பெண் யாரேனும் கர்ப்பமாக இருப்பதை தெரிந்தால், மகிழ்ச்சி வீடு முழுவதும் பரவும். இருப்பினும், கர்ப்ப காலத்தில் (Pegnancy) தாய் மற்றும் குழந்தையை பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம். இந்த நேரத்தில், கர்ப்பிணி பெண் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். ஆனால், யாரும் கவனிக்க முடியாத விஷயம் மலம் கழிக்கும் முறையாகும். இப்போது, பெரும்பாலான வீடுகளில் வெஸ்டன் டாய்லெட் வைக்கப்படுகிறது. இவை இன்றைய காலத்தில் வெஸ்டன் டாய்லெட் (Western Toilet) மிகவும் வசதியானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், சில வீடுகளில் இன்னும் இந்திய கழிப்பறைகள் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தநிலையில், கர்ப்ப காலத்தில் இந்திய கழிப்பறையை (Indian Toilet) பயன்படுத்துவது பாதுகாப்பானதா இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் அன்றாட வழக்கத்துடன் தொடர்புடைய சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது உங்கள் குழந்தையின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
ALSO READ: கர்ப்ப காலத்தில் கை, கால்கள் வீங்குவது ஏன்? வீக்கத்தை இப்படி சரிசெய்யலாம்..!




கர்ப்ப காலத்தில் இந்திய கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டுமா?
இதுவரை இந்திய கழிப்பறையை பயன்படுத்துவதால் கர்ப்பிணி பெண்ணுக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டதாக தெரியவில்லை. குறைப்பிரசவத்தின் அபாயம் இருந்தாலும், நீங்கள் கர்ப்ப காலத்தில் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இந்திய கழிப்பறையில் அமருவது பிரசவத்தின்போது இடுப்பு தசைகளை பலப்படுத்துகிறது.
ஆனால், உங்களுக்கு இதற்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்திருந்தால் கர்ப்ப காலத்தில் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்திய கழிப்பறையில் ஒருவர் முழுவதும் காலை மடக்கி உட்காரும்படி இருக்கும். இது இடுப்பு வளைவு அபாயத்தை குறைக்கிறது. ஒரு கர்ப்பிணி பெண் குனிந்து உட்காரும்போது, அது மலத்தை முழுவதுமாக வெளியேற்ற குடல்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம், வயிறு நன்கு சுத்தம் செய்யப்படுகிறது.
ALSO READ: தாய்ப்பால் கொடுக்க முடியாமல் சிரமமா..? சுரப்பை அதிகரிக்க இந்த உணவுகள் உதவும்..!
தொடைகள் வலுப்பெறும்:
இந்திய கழிப்பறையில் அமர்வது தொடைகள் மற்றும் இடுப்பு பகுதியை பலப்படுத்துகிறது. மேலும், இப்படி அமருவது குழந்தை சுக பிரசவமாக பிறக்க உதவி செய்யும். கழிப்பறையில் குணிந்து அமரும்போது உங்கள் முதுகை நேராக வைக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் உடலில் சமநிலையை பராமரிக்கும். இதன் காரணமாக நீங்கள் விழவோ அல்லது வலியோ ஏற்படாது.