Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pregnancy Leg Swelling: கர்ப்ப காலத்தில் கை, கால்கள் வீங்குவது ஏன்? வீக்கத்தை இப்படி சரிசெய்யலாம்..!

Swollen Legs During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கை, கால் வீக்கம் பொதுவானது. ஹார்மோன் மாற்றங்கள், நீர் தேக்கம், நீண்ட நேரம் நிற்கவோ அமரவோ செய்தல் போன்றவை இதற்கு காரணம். பொட்டாசியம் நிறைந்த உணவு, போதுமான நீர்ச்சத்து, ஓய்வு, மற்றும் எண்ணெய் மசாஜ் ஆகியவை வீக்கத்தை குறைக்க உதவும். சரியான சிகிச்சைக்கு மருத்துவரை அணுகுவது அவசியம்.

Pregnancy Leg Swelling: கர்ப்ப காலத்தில் கை, கால்கள் வீங்குவது ஏன்? வீக்கத்தை இப்படி சரிசெய்யலாம்..!
கர்ப்ப கால கை, கால்கள் வீக்கம்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 30 Jun 2025 19:03 PM

கர்ப்ப காலத்தின்போது (Pregnancy) பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றன. கர்ப்பத்தின் 9 மாதங்களும் பல்வேறு சவால்களால் நிறைந்திருக்கும். இந்த நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு பல வகையான உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படும். இதற்கு காரணம், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே காரணம் என்று கூறப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒரு பிரச்சனை கை மற்றும் கால்களில் ஏற்படும் (Leg Swelling) வீக்கமாகும். இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும். இது ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், கர்ப்ப காலத்தில் கை மற்றும் கால்கள் வீங்குவதற்கான காரணங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் சில நேரங்களில் கால்களை நீண்ட நேரம் தொங்கவிட்டு உட்கார்ந்துகொள்வது, தொடர்ந்து நிற்பது, உணவில் குறைந்த பொட்டாசியம் எடுத்துக்கொள்வது, அதிக காஃபின் எடுத்துக்கொள்வது, குறைந்த தண்ணீர் குடிப்பது போன்றவையும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்குவதற்கான காரணங்கள் என்ன..?

கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் 5வது மாதம் முதல் பிரசவம் வரை எந்த நேரத்திலும் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உடல் கடுமையாக உழைப்பை கொடுக்கும். கர்ப்ப காலத்தில் உடலில் இரத்தம் மற்றும் திரவங்களின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக, கால்களில் மட்டுமல்ல, கைகள், முகம் உட்பட உடலின் பிற பகுதிகளிலும் வீக்கம் ஏற்படலாம். இது நடப்பதிலும் சரியாக வேலை செய்வதிலும் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை எடிமா என்று அழைக்கப்படுகிறது. கை மற்றும் கால்களில் வீக்கம் பொதுவான பிரச்சனை என்றாலும், அதுவாகவே படிப்படியாக குறைய தொடங்கும். ஆனால், சில பெண்களுக்கு இந்த பிரச்சனை தொடர்ச்சியாகவும், பல நாட்களாகவும் இருக்கும்.

பெரும்பாலும் கர்ப்ப காலங்களில் ஓய்வு இல்லாததால், பெண்களின் பாதங்களில் வீக்கம் ஏற்படும். நீண்ட நேரம் நிற்பதாலும் நடப்பதாலும், அவர்களின் பாதங்களில் அழுத்தம் ஏற்படும். இதனால் அவர்களின் பாதங்கள் அதிகமாக வீங்க தொடங்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அதிக ஓய்வு எடுப்பது முக்கியம்.

கர்ப்ப காலத்தில் வீங்கிய கால்களை சரி செய்வது எப்படி..?

  • கர்ப்ப காலத்தில் கால்களுக்கு அடியில் தலையணை வைத்து தூங்குவது பாதங்களில் ஏற்படும் வீக்க பிரச்சனைகளை சரிசெய்யும். இதை தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் செய்தாலே போதுமானது.
  • கர்ப்ப காலத்தில் உடலில் பொட்டாசியத்தின் அளவைக் குறைக்க வேண்டாம். இது இரத்த அழுத்தம், நீர் தேக்கம் மற்றும் பாதங்களில் வீக்கம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
  • கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் எந்த விதமான வீக்கத்தையும் குறைக்க, உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது முக்கியம். அதன்படி, கர்ப்ப காலத்தில் பெண்கள் அவ்வப்போது தண்ணீர், ஜூஸ், இளநீர் போன்றவற்றை குடிக்கலாம்.
  • கர்ப்ப காலத்தில் பாதங்களில் ஏற்படும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற, கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை மசாஜ் செய்யலாம்.