Health Tips: தைராய்டு நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.. இது பிரச்சனையை அதிகரிக்கும்..!
Thyroid Problems: தைராய்டு கோளாறு உள்ளவர்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வெள்ளை ரொட்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ், அதிக காபி, வேர்க்கடலை, மற்றும் டோஃபு போன்றவை தைராய்டு ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். இவை இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். ஆரோக்கியமான தைராய்டு செயல்பாட்டிற்கு, சரியான உணவு முறை மிகவும் முக்கியம்.

நமது உடலில் பல உறுப்புகள் உள்ளன. இவை அனைத்து தங்கள் பணிகளை திறம்பட செய்தால் மட்டுமே, நம் உடல் சீராக இயங்கும். அதேபோல், நமது கழுத்தின் கீழ் பகுதியில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி போன்ற சுரப்பி உள்ளது. இது தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோன்கள் (Thyroid hormone) டி3 மற்றும் டி4 ஐ உற்பத்தி செய்கிறது. இது வளர்சிதை மாற்றம், ஆற்றல் (Energy) பயன்பாடு, வளர்ச்சி, இதய துடிப்பு (Heart Beat) மற்றும் உடலின் வெப்பநிலை கட்டுப்பாடு போன்ற முக்கியமான செயல்பாடுகளுக்கு இந்த ஹார்மோன்கள் அவசியம். தைராய்டு சுரப்பி சாதாரண அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் போது, அது தைராய்டு நிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை உடலுக்கு ஆரோக்கியமானது.
தைராய்டு சுரப்பி தேவைக்கு அதிகமாக ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் போது, ஹைப்பர் தைராய்டிசம் என்ற நிலை ஏற்படுகிறது. இந்த சுரப்பி குறைவான ஹார்மோன்களை உற்பத்தி செய்தால், ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது. இந்த இரண்டு நிலைகளும் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன. ஹைப்பர் மற்றும் ஹைப்போ தைராய்டு நிலை தைராய்டு கோளாறு என்று அழைக்கப்படுகிறது. தைராய்டு கோளாறு எந்த வயதினருக்கும் ஏற்படலாம். எனவே, தைராய்டு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்தி சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். இந்தநிலையில், தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 30 வயதுக்கு மேல் பெண்களுக்கு அதிகரிக்கும் தைராய்டு.. இவற்றை எப்படி சரிசெய்வது..?




என்ன சாப்பிடக்கூடாது..?
- தைராய்டு நோயாளிகள் வெள்ளை பிரட்யை தவிர்க்க வேண்டும். இது உடலில் சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்க செய்யும். இதனால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. இது தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையின்மையை ஏற்படுத்தி பிரச்சனையை உண்டாக்கும். அதேபோல், வெள்ளை பிரட்யை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
- தைராய்டு நோயாளிகள் உருளைக்கிழங்கு சிப்ஸை குறைவாக சாப்பிட வேண்டும். ஏனெனில் அவற்றில் ஹார்மோன்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. நீங்கள் சிப்ஸ் சாப்பிட ஆசைப்பட்டால் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்தி வீட்டிலேயே அவற்றைச் செய்து சாப்பிடுவது நல்லது.
- தைராய்டு நோயாளிகளுக்கு காபி குடிப்பது தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்க செய்யும். காபியில் காணப்படும் காஃபின் கார்டிசோலை அதிகரிக்கிறது. தைராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காபி குடிப்பது நல்லது.
- வேர்க்கடலையில் தைராய்டு பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடிய சில பொருட்கள் உள்ளன. எனவே, தைராய்டு நோயாளிகள் தினமும் வேர்க்கடலையை சாப்பிடக்கூடாது. அவற்றை சாப்பிட வேண்டும் என்றால், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சிறிய அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.
ALSO READ: மார்பு அழுத்தம், வியர்வை.. இந்த அறிகுறிகள் இருக்கா? மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு
- டோஃபு (டோஃபு என்பது சோயாபீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருள்) பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் அது தைராய்டு நோயாளிகளுக்கு எப்போதும் நன்மை பயக்காது. டோஃபுவில் தைராய்டு ஹார்மோன் அளவை அதிகரிக்கும் சில பொருட்கள் உள்ளன. எனவே, தைராய்டு நோயாளிகள் டோஃபு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.