Health Tips: 30 வயதுக்கு மேல் பெண்களுக்கு அதிகரிக்கும் தைராய்டு.. இவற்றை எப்படி சரிசெய்வது..?
Thyroid Problems Women Over 30: 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடையே தைராய்டு பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் ஆகியவை முக்கிய காரணங்கள். அறிகுறிகளில் எடை மாற்றம், மாதவிடாய் பிரச்சனைகள், சோர்வு ஆகியவை அடங்கும். சரியான ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மன அழுத்த நிர்வாகம் ஆகியவை தடுப்பு நடவடிக்கைகளாகும்.

நவீன வாழ்க்கையில் 30 வயதுக்கு மேற்பட பெண்கள் சிலருக்கு தைராய்டு பிரச்சனை (Thyroid Problems) வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பெண்களில் எடை, மாதவிடாய் அல்லது மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் தோன்றினால் அதை எளிதாக புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டியது முக்கியம். தைராய்டு என்பது கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, உடலில் பல செயல்பாடுகளை செய்ய உதவுகிறது. தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோனை (Hormone) உற்பத்தி செய்யாதபோது தைராய்டு ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது. இது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்தநிலையில், 30 வயதிற்கு மேல் பெண்களுக்கு ஏன் தைராய்டு அதிகரிக்கிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.
30 வயதிற்கு மேல் பெண்களுக்கு ஏன் தைராய்டு அதிகரிக்கிறது..?
30 வயதிற்குப் பிறகு பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. கர்ப்பம், மாதவிடாய் மாற்றங்கள் அல்லது உடலில் ஏற்படும் பிற மாற்றங்கள் தைராய்டு சுரப்பியை நேரடியாக பாதிக்கின்றன. பெரும்பாலும் 30 வயதிற்குப் பிறகு, பெண்களின் பொறுப்புகள் அதிகமாகின்றன, இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். இப்படியான தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் சமநிலையற்ற உணவு முறை பெண்களுக்கு தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கலாம்.
உணவுமுறை மற்றும் குடும்ப பின்னணி:
பெண்கள் பெரும்பாலும் ஆரோக்கியம் சார்ந்த உணவுமுறைகளை தவிர்க்கிறார்கள். இது இவர்களுக்கு போதுமான ஆற்றலை தருவதில்லை. எனவே, உணவில் அயோடின், வைட்டமின் டி, செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இல்லாததும் தைராய்டு அபாயத்தை அதிகரிக்கும். ஒரு பெண்ணின் குடும்பத்தில் யாருக்காவது தைராய்டு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அவர்களுக்கும் தைராய்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.




பெண்களில் தைராய்டு அறிகுறிகள்:
பெரும்பாலும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனைகளை சாதாரண பிரச்சனைகளாகவே கடந்து செல்கிறோம். அதில் மன அழுத்தம், பலவீனம் போன்றவை இயல்பானவை ஆனால் அவற்றை சரியான நேரத்தில் கண்டறிந்து மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம், இல்லையெனில் பிரச்சனை கணிசமாக அதிகரிக்கும். அதாவது, நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் சோர்வாகவோ, சோம்பலாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால், அது தைராய்டு பிரச்சனையாக இருக்கலாம்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்:
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களில், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியுடன், குறைவான அல்லது அதிக இரத்தப்போக்கு இருப்பதும் தைராய்டு பிரச்சனையாக இருக்கலாம். அதேபோல், தைராய்டு பிரச்சனை இருக்கும்போது, பெண்களின் முடி பெரும்பாலும் மெலிந்து உதிரத் தொடங்கும், இது தவிர சருமமும் வறண்டு போகக்கூடும்.
இதுபோன்ற பிரச்சனைகளை எப்படி பாதுகாத்துக் கொள்வது?
- தைராய்டு பிரச்சனைகளைத் தவிர்க்க, அயோடின் கலந்த உப்பு, கடற்பாசி, முட்டை, பால், தயிர், பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இது தவிர, வைட்டமின் டி, செலினியம் மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- யோகா, தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் தைராய்டு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மேலும், போதுமான தூக்கம் பெறுவதும் முக்கியம். தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, இது தைராய்டு பிரச்சனைகளையும் தடுக்கலாம்.
- 30 வயதிற்குப் பிறகு தைராய்டு பிரச்சனைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும். மேலும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பரிசோதனை செய்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.