AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர்ந்து 10 நாட்கள் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றம் – ஆச்சரிய தகவல்

Health Benefits of Green Tea: சமீப காலமாக வாழ்க்கை முறை நோய்களினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவற்றை எளிமையான உணவுகளால் குணப்படுத்த முடியும். அந்த வகையில் தொடர்ந்து 10 நாட்கள் கிரீன் டீ குடிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 10 நாட்கள் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றம் – ஆச்சரிய தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Jun 2025 23:00 PM IST

கிரீன் டீ (Green Tea) என்பது ஒரு புத்துணர்ச்சிக்காக குடிக்கும் பானம் மட்டும் அல்ல,  இது ஒரு இயற்கை மருந்தாகவும் செயல்படுகிறது. குறிப்பாக கல்லீரல் ஆரோக்கியத்தில் அதன் நேர்மறையான விளைவு இப்போது மருத்துவ நிபுணர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. புதிய ஆராய்ச்சி மற்றும் மருத்துவர்களின் கருத்துகளின்படி, தினமும் கிரீன் டீ குடிப்பதால் கல்லீரல் தொடர்பான நோய்களைக் குறைக்கலாம் என்பது தெரியவந்துளளது. மேலும் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தினமும் கிரீன் டீ குடிப்பது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறது. இது மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (NAFLD) வளர்ச்சியையும் தடுக்கிறது.

கிரீன் டி குடிக்கத் தொடங்கிய  10 நாட்களில் தெரியும் மாற்றம்

கிரீன் டீ குடிக்கத் தொடங்கிய 10 நாட்களுக்குள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், குறிப்பாக பிஃபிடோபாக்டீரியாக்கள் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை செரிமான அமைப்பை பலப்படுத்துகின்றன. அவை கல்லீரலில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கின்றன. கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கல்லீரலைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதய ஆரோக்கியத்துக்கும் ஏற்றது

கிரீன் டீ கல்லீரலுக்கு மட்டுமல்ல, இதய ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு நல்ல பானமாக அறியப்படுகிறது. கிரீன் டீ குடிப்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் விளக்கினர்.

கிரீன் டீயில் காபியை விட குறைவான காஃபின் உள்ளது. இது ஒரு நேர்மறையான அம்சம். இது  காபி குடிப்பதால் ஏற்படும் தூக்கமின்மையை இது ஏற்படுத்ததாது. அதே நேரத்தில், இந்த தேநீர் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

கிரீன் டீயில் உள்ள இயற்கை ரசாயனங்கள், குறிப்பாக அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கும். செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

மேலும், நீண்ட காலமாக கிரீன் டீ குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற மூளை தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் அபாயம் குறைவு என்று ஆராய்ச்சி காட்டுகிறது. காலையில் ஒரு கப் கிரீன் டீ குடிப்பது உடலில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். இருப்பினும், எந்தவொரு புதிய பழக்கத்தையும் தொடங்குவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9 Tamil பொறுப்பேற்காது.)

Follow Us