AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டயர்டா இருக்கா? பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் டிரை பண்ணுங்க! இவ்வளவு நன்மைகளா?

Natural Energy Boos : போதிய ஓய்வு இல்லாததன் காரணமாக சோர்வு என்பது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் ஒரு சிலருக்கு அதிக வேலை செய்யாமலேயே சோர்வாக உணர்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், வெல்லம் மற்றும் பேரீச்சம்பழங்களைப் பயன்படுத்துவது உடனடியாக நன்மை பயக்கும். இந்த கட்டுரையில் பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டயர்டா இருக்கா? பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் டிரை பண்ணுங்க! இவ்வளவு நன்மைகளா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jun 2025 22:58 PM IST

மாறிவரும் வாழ்க்கை முறையால் (Lifestyle), மக்கள் நேரம், காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்து வருகிறார்கள். போதிய ஓய்வு இல்லாததன் காரணமாக சோர்வு என்பது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் ஒரு சிலருக்கு அதிக வேலை செய்யாமலேயே சோர்வாக உணர்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், வெல்லம் மற்றும் பேரீச்சம்பழங்களைப் (Dates) பயன்படுத்துவது நன்மை பயக்கும். டெல்லியைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பி. பராஷரின் கூற்றுப்படி, பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் இயற்கையாகவே உடலுக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் அளிக்கும், இது சோர்வு போன்ற பிரச்னைகளை நீக்கும். மேலும் பேரீச்சம்பழம் மற்றும் வெல்லத்தை தொடர்ந்து பயன்படுத்துவது செரிமானத்தை மேம்படுத்தும் என அவர் சொல்கிறார்..

பேரீச்சம்பழம் மற்றும் வெல்லத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் இரண்டும் இயற்கையாகவே இனிப்பானவை. டாக்டர் ஆர்.பி. பராஷரின் கூற்றுப்படி, இரும்பு மற்றும் நார்ச்சத்துடன், போதுமான அளவு வைட்டமின்களும் உள்ளன. இது தவிர, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், புரதம் மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் இதில் காணப்படுகின்றன. இதன் காரணமாக, இது இரத்த சோகை, செரிமான பிரச்சனைகளை நீக்குதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உதவியாக இருக்கும்.

வெல்லம் மற்றும் பேரீச்சம்பழம் எவ்வாறு சோர்வைப் போக்க உதவுகின்றன?

பேரீச்சம்பழம் மற்றும் வெல்லத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உள்ளன. அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் தொடர்ந்து பலவீனமாகவோ அல்லது சோர்வாகவோ உணர்ந்தால், பேரீச்சம்பழம் அல்லது வெல்லம் சாப்பிடுவது சில நிமிடங்களில் உங்களை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.

இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்.

பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாடு அதாவது இரத்த சோகை பெண்கள் மற்றும் குழந்தைகளில் சோர்வுக்கு ஒரு முக்கிய காரணமாகும். பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் இரண்டும் இரும்புச்சத்து நிறைந்தவை. இது உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும், ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது சோர்வு, தலைவலி மற்றும் பலவீனம் போன்ற பிரச்னைகளை நீக்கும்.

செரிமான மண்டலம் வலுவடைகிறது

பேரீச்சம்பழம் மற்றும் வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஏற்படும் கனத்தன்மை போன்ற பிரச்னைகளைக் குறைத்து, உடலை லேசாகவும் சுறுசுறுப்பாகவும் உணர வைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் உதவியாக இருக்கும்

பேரீச்சம்பழம் மற்றும் வெல்லத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. குறிப்பாக வானிலை மாறும்போது ஏற்படும் சளி மற்றும் இருமலின் போது அவற்றின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம்

ஆராய்ச்சியின் படி, பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் பயன்படுத்துவது ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

எப்படி சாப்பிடுவது?

  • காலையில் வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம்பழம் அல்லது வெல்லம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
  • பேரீச்சம்பழம் அல்லது வெல்லத்தை பாலில் கலந்து சாப்பிடுவது சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
  • பேரீச்சம்பழம் அல்லது வெல்லத்தை இஞ்சியுடன் சேர்த்து சாப்பிடுவது மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
  • பேரீச்சம்பழம் அல்லது வெல்லத்தை குழந்தைகளுக்கு சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம்.
  • நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் அல்லது வெல்லத்தை சாப்பிடும் முன் மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

Follow Us