Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: 30 நாட்கள் வெள்ளை சர்க்கரையை நிறுத்தி பாருங்க.. உடலில் இந்த ஆரோக்கிய மாற்றங்கள் நிகழும்!

30-Day No Sugar Challenge: வெள்ளை சர்க்கரை நம் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். 30 நாட்கள் வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்தால், எடை இழப்பு, இரத்த சர்க்கரை அளவு சீராகுதல், பல் மற்றும் இதய ஆரோக்கியம் மேம்பாடு, சருமம் பிரகாசமாகுதல் போன்ற நன்மைகள் கிடைக்கும். இயற்கை இனிப்பு கொண்ட பழங்களை உண்ணலாம். ஆனால், முழுமையான சர்க்கரை நீக்கம் ஆரோக்கியமானதா என்பதை மருத்துவ ஆலோசனை பெற்று முடிவு செய்யவும்.

Health Tips: 30 நாட்கள் வெள்ளை சர்க்கரையை நிறுத்தி பாருங்க.. உடலில் இந்த ஆரோக்கிய மாற்றங்கள் நிகழும்!
வெள்ளை சர்க்கரைImage Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 22 Jun 2025 18:25 PM

தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் வெள்ளை சர்க்கரை (White Sugar) அதிக சுவையை கொடுத்தால், அது உங்கள் உடலை எவ்வாரு பாதிக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? நீங்கள் சர்க்கரையை விட்டுவிடுவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், முதலில் ஒரு 30 நாட்களுக்கு வெள்ளை சர்க்கரை இல்லாத உணவுகளை எடுத்து பாருங்கள். இவ்வாறு செய்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படும். அதாவது, உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிப்பதில் இருந்து சரும ஆரோக்கியத்தை (Skin Care) மேம்படுத்துவது வரை ஆச்சரியமான சில மாற்றங்கள் நிகழும். அதன்படி, 30 நாட்கள் வெள்ளை சர்க்கரை நிறுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

எடை இழப்பு:

வெள்ளை சர்க்கரை உட்கொள்ளலை குறைப்பது அல்லது ஒரு மாதத்திற்கு அதை சாப்பிடாமல் இருப்பது எடை குறைப்பிற்கு வழிவகுக்கும். ஏனெனில், இது காலியான கலோரிகளை நீக்கி, அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

இரத்த சர்க்கரை அளவு:

30 நாட்கள் நம் உடலில் சர்க்கரையை குறைப்பது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழவு நோயின் அபாயத்தை குறைக்க உதவும்.

பல் மற்றும் இதய ஆரோக்கியம்:

சர்க்கரையை தவிர்ப்பது வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல் துவாரங்கள் மற்றும் ஈறு நோய் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கும். சர்க்கரை உட்கொள்ளலை குறைப்பது இதய நோய் போன்ற பெரிய நோய்களின் உருவாக்கும் அபாயத்தை குறைக்கும்.

தெளிவான சருமம்:

அதிக சர்க்கரை உட்கொள்ளல் முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சனைகளை தரும். வெள்ளை சர்க்கரையை நிறுத்தினால் சிலரின் சரும ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ஆரோக்கியமான குடல்:

அதிக சர்க்கரை உட்கொள்ளல் குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைக்கும். சர்க்கரையை குறைப்பது ஆரோக்கியமான குடல் சூழலை மேம்படுத்த உதவி செய்யும். நிலையான இரத்த சர்க்கரை அளவுகள் மனநிலையை சாதகமாக பாதிக்கும். மனநிலை மாற்றங்களை குறைத்து மன தெளிவை மேம்படுத்தும்.

முழுவதும் சர்க்கரையை நிறுத்துவது நல்லதா..?

வெள்ளை சர்க்கரையை முழுவதும் தவிர்ப்பது நல்லது என்றாலும், உடலுக்கு தேவையான சர்க்கரை ஊட்டச்சத்துகளை கொடுப்பது மிக மிக முக்கியம். சர்க்கரை இல்லாதது உடலில் ஆற்றல் இழப்பை கொடுக்கும். அதன்படி மாம்பழம், ஸ்ட்ராபெரி, அன்னாசிப்பழம் போன்ற சில பழங்களில் இயற்கை இனிப்பு சத்துகள் உள்ளன. எனவே, சர்க்கரை இல்லாத உணவுகளை தவிர்த்தாலும், பழங்கள் போன்ற இனிப்பு சத்துகள் நிறைந்த பழங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. பழங்களில் இயற்கையான சர்க்கரைகள் இருந்தாலும், இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துகளை கொண்டுள்ளது. இவற்றில் உள்ள நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் தாக்கத்தை குறைக்கிறது. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுகின்றன. மேலும், செரிமானத்தையும் சீராக்குகிறது.