Health Tips: உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..? இந்த விஷயத்தை கவனியுங்கள்..!
Unexplained Weight Gain: உடற்பயிற்சி மற்றும் சரியான உணவுமுறை பின்பற்றியும் எடை அதிகரிப்பு ஏற்பட்டால், தைராய்டு, PCOS போன்ற ஹார்மோன் சமநிலையின்மை அல்லது மன அழுத்தம் போன்ற காரணங்கள் இருக்கலாம். இந்த பிரச்சனைகளை கண்டறிய TSH, T3, T4, PCOS சோதனைகள் செய்யப்பட வேண்டும். எடை அதிகரிப்பிற்கு உண்மையான காரணத்தை கண்டறிந்து சரியான சிகிச்சையைப் பெறுவது முக்கியம்.

நவீன வாழ்க்கை முறை, துரித உணவுகள் மற்றும் உடல் செயல்பாட்டுயின்மை காரணமாக ஒருவர் திடீரென உடல் எடை (Weight Lose) அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், ஒரு சிலர் நீண்டகாலமாக உடல் எடை பருமன் காரணமாக அவதிப்பட்டு வருவார்கள். இதனால், எப்படியாவது உடலின் எடையை குறைக்க வேண்டும் என்று வீட்டிலேயே உடற்பயிற்சி, யோகா (Yoga) மற்றும் ஜிம்மிற்கு சென்று கடினமான உழைப்பை போடுவார்கள். இதுதவிர, ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுதல், டயட் (Diet) பின்பற்றுதல் போன்றவற்றையும் செய்வார்கள். இருப்பினும், சிலருக்கு எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்க தொடங்கும். இதனால், பெரும்பாலும் மக்கள் தங்கள் கடின உழைப்பில் ஏதோ குறைபாடு இருப்பதாக நினைப்பார்கள்.
சில நேரங்களில் எடை குறையாமல் இருப்பதற்கு சில கடுமையான உடல்நலக் காரணங்கள் இருக்கலாம். அவற்றில் தைராய்டு சமநிலையின்மை அல்லது ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை அடங்கும். எடை அதிகரிப்பதற்கான காரணத்தையும், எந்த சோதனைகள் அதைக் கண்டறிய முடியும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
தைராய்டு:
உங்கள் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், நீங்கள் தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை சரிபார்க்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றம், ஆற்றல் நிலை, எடை மற்றும் மன நிலையை நேரடியாக பாதிக்கும். அதன்படி, ஹார்மோன் சமநிலை நிலை குலைந்து எடை அதிகரிக்க தொடங்கும். அதேநேரத்தில் ஒருவருக்கு ஏற்கனவே ஹைப்பர் தைராய்டிசம் இருந்தும், அவரது உடல் எடை குறையவில்லை என்றால், மருத்துவரை அணுகி தைராய்டை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதற்காக, TSH, T3 மற்றும் T4 எனப்படும் சோதனைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குடும்பத்தில் தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் எப்போதும் சோர்வாக இருப்பவர்கள் கண்டிப்பாக இந்தப் பரிசோதனையை செய்து கொள்வது முக்கியம்.




PCOS பிரச்சனை:
பெண்களில் எடை அதிகரிப்பதற்கு PCOS என்ற பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம். இதுவும், தைராய்டு போன்று ஹார்மோன் தொடர்பான பிரச்சனையாகும். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்றதாகி, கருப்பைகள் முட்டைகளை சரியாக உற்பத்தி செய்ய முடியாது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்க தொடங்கும். இதன் காரணமாக எடை வேகமாக அதிகரித்து அதைக் குறைப்பது மிகவும் கடினமாகிறது. அதன்படி, அதற்கான சோதனைகளை மேற்கொள்வது நல்லது.
மன அழுத்தம்:
உடல் எடையை குறைக்க முதலில் நீங்கள் மனதளவிலும் எந்தவொரு அழுத்தமும் இன்றி இருப்பது முக்கியம். இதற்கு, உடற்பயிற்சி மட்டும் போதாது, பல நேரங்களில் மக்கள் உடற்பயிற்சி செய்த பிறகு, ஏற்படும் பசி காரணமாக அதிகமாக சாப்பிட தொடங்குகிறார்கள். மேலும், ஒரு சிலர் ஒழுங்காக தூங்குவதில்லை, அதிகப்படியான மன அழுத்தத்தை எடுத்து கொள்கிறார்கள். இதுவும் உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்துவதை தடுக்கும். நல்ல ஆரோக்கியத்திற்கு, உடற்பயிற்சியுடன், நமது தூக்கம், உணவு மற்றும் மன அமைதியையும் பராமரிப்பது முக்கியம். எனவே, உடல் எடையை குறைப்பதற்கு முறையான சோதனை மூலம், உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப சிகிச்சை அளித்து உடல் எடையை குறைக்கலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9 Tamil பொறுப்பேற்காது.)