AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Diabetic Diet Alert : நீரிழிவு என்பது தற்போது உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் ஒரு தீவிர நோய். தவறான உணவுப் பழக்கம் இந்த நோயை மேலும் மோசமாக்கும். குறிப்பாக, சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தும் ஆபத்து கொண்டவை. இந்த கட்டுரையில் நீரிழிவு நோய் பாதித்தவர்கள் உருளைக் கிழங்கு சாப்பிடலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Jun 2025 23:45 PM IST

உருளைக்கிழங்கு (Potato) சமைக்க எளிதானது. இவை சுவையாகவும் இருப்பதால் பலர் இவற்றை விரும்புகிறார்கள். இருப்பினும், இவை ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. இந்த தலைப்பில் ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. அவை வேக வைத்தாலும் சரி, பொரித்தாலும் சரி, இந்த ஸ்டார்ச் விரைவாக உடலில் நுழைந்து குளுக்கோஸாக மாறுகிறது. இது இரத்த சர்க்கரை (Blood Sugar) அளவை விரைவாக அதிகரிக்கிறது. அதனால்தான் நீரிழிவு (Diabetic) நோயாளிகள் உருளைக்கிழங்கை முற்றிலுமாக சாப்பிடுவதை நிறுத்தாவிட்டாலும், சாப்பிடும் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உருளைக்கிழங்கு உடல் நலத்திற்கு முற்றிலும் தீங்கானது என்று சொல்வது சரியல்ல. நாம் அவற்றை எப்படி சமைக்கிறோம் என்பது முக்கியம். உதாரணமாக, உருளைக்கிழங்கை எண்ணெய் இல்லாமல் வேக வைத்து சாப்பிடுவது அல்லது குறைந்த எண்ணெயில் கிரில் செய்வது நல்ல முறைகள். இதைச் செய்வதால் அதிக கொழுப்பு சேராது, மேலும் ஊட்டச்சத்துக்களும் ஓரளவு அப்படியே இருக்கும். இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் இவற்றை அடிக்கடி அல்லது அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கிற்கு மாற்று

உருளைக்கிழங்கிற்கு பதிலாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. இவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இதன் பொருள் அவை இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கின்றன. மேலும், அவற்றில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஒரு நல்ல மாற்றாகும்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பிற உணவுகள்

  • வெள்ளை அரிசி, மைதா கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ள உணவுகள். கிளைசெமிக் குறியீடு அதிகமாக இருப்பதால், ரத்த சர்க்கரையை வெகுவாக உயர்த்தும். பாரம்பரிய அரிசிக்கு மாற்றாக மில்லெட், பாசிப் பருப்பு சாதம் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.
  • சிப்ஸ், பக்கோடா, மசாலா வடை, சாண்ட்விச் போன்றவை அதிக எண்ணெய், உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது ரத்தச் சர்க்கரையை மட்டுமல்ல, இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கலாம்.
  • வெண்ணெய், சீஸ் போன்றவை உடலில் அதிக அளவில் கொழுப்பை சேர்க்கின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு இதுவும் ஆபத்தானது. இதற்குப் பதிலாக அவோக்காடோ, பாலில் உள்ள குறைந்த கொழுப்பு வகைகள் தேர்வு செய்யலாம்.
  • மாம்பழம், சப்போட்டா, திராட்சை போன்றவை இயற்கையானவை என்றாலும், மிகுந்த சர்க்கரையை கொண்டுள்ளன. எனவே இந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.

நாம் உண்ணும் உணவு சரியான அளவிலும், சீரான முறையிலும் இருந்தால் மட்டுமே நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. உருளைக்கிழங்கை முற்றிலுமாக கைவிட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அவற்றை அதிகமாக சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

Follow Us