AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வயதான தோற்றத்தை அளிக்கும் சர்க்கரை – தவிர்ப்பது எப்படி?

Skincare Alert : உணவில் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்வதால் நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும் என்பது நமக்கு தெரியும். ஆனால் சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால், முகப்பரு போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயதான தோற்றத்தையும் அளிக்கும். இதனை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வயதான தோற்றத்தை அளிக்கும் சர்க்கரை – தவிர்ப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 08 Jun 2025 23:52 PM IST

அதிக சர்க்கரை (Sugar) சாப்பிடுவது பொதுவாக எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் (Diabetic) மற்றும் பல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. ஆனால் இது நம் சருமத்தையும் (Skin) வெகுவாக பாதிக்கும். சமூகத்தில் சிலர் குறிப்பிட்ட வயதைக் கடந்தும் இளமையாக இருப்பதைப் பார்த்திருப்போம். மேலும் சிலர் இளம் வயதிலேயே அவர்களுக்கு விரைவில் வயதான தோற்றம் வந்து விடும். இதன் காரணம் பலருக்கும் புரியாமல் இருக்கலாம். காரணம் அவர்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவைப் பொறுத்து இது மாறுபடும். நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த பிரச்சினை மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. அதிக அளவு சர்க்கரை எடுத்துக்கொள்வது எப்படி நம் உடல் நலத்தை பாதிக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

அதிகம் சர்க்கரை சாப்பிடுதவால் ஏற்படும் தோல் பாதிப்புகள்

அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால் உடலில் கிளைசேஷன் எனப்படும் ஒரு செயல்முறை ஏற்படுகிறது. இந்தச் செயல்பாட்டில், சர்க்கரை மூலக்கூறுகள் சருமத்தை வலுவாகவும் ஃபிரெஷ்ஷாகவும் வைத்திருக்கும் முக்கியமான புரதங்களான கொலாஜன் மற்றும் எலாஸ்டினை சேதப்படுத்துகின்றன. இதனால் சருமம் அதன் மென்மையையும் உறுதியையும் இழந்து தளர்வாகிவிடும். இதன் விளைவாக, சுருக்கங்கள் உருவாகின்றன.

இந்த செயல்முறையால் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரதங்கள் சேதமடைகின்றன, இதனால் சருமத்தின் இயற்கையான நெகிழ்ச்சித்தன்மை குறைகிறது. இந்தக் காரணத்திற்காக, அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் தொய்வு ஆகியவற்றை ஏற்படுத்தி வயதான தோற்றத்தை அளிக்கின்றன.

அதிகமாக சர்க்கரை சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான பழக்கம் என்றாலும், அது நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதிகப்படியான சர்க்கரை உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது சிவந்து போதல், நிறமாற்றம் மற்றும் சில நேரங்களில் முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனால் சருமம் அதன் இயற்கையான ஈரப்பதத்தை இழக்கத் தொடங்குகிறது.

மேலும், அதிகமாக சர்க்கரை உட்கொள்வது புற ஊதா கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தை அதிகரிக்கிறது. இதனால் சருமத்தில் கரும்புள்ளிகள் உருவாகி அதன் இயற்கையான பொலிவு குறைகிறது.

சர்க்கரையைக் குறைத்து உங்கள் சருமத்தைப் பராமரிக்க சில முக்கியமான வழிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுகுறித்து பார்க்கலாம்.  ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பெர்ரி, பாதாம், வாடல்நட் போன்ற நட்ஸ்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். கூடுதலாக, நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம், இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும், சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தப்பட வேண்டும்.

அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், சருமத்தில் நீண்டகால எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எனவே, சர்க்கரைக்குப் பதிலாக சிறு தானியங்கள், பழங்கள், பருப்பு வகைகள் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவுகளை உட்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்திற்கு பங்களிக்கின்றன.

Follow Us