கோடையில் அதிகரிக்கும் சர்க்கரை நோய் – கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்
Natural Ways to Reduce Blood Sugar : இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், உடலில் பல பிரச்னைகள் ஏற்படலாம்.இதுபோன்ற சூழ்நிலைகளில் இயற்கை முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது சர்க்கரை அளவை உடனடியாகக் குறைக்க உதவும் முறைகளை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்

நீரிழிவு நோய் (Diabetic) தற்போது இந்தியர்களிடையே மிகவும் சவாலானதாக மாற்றி வருகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை (Lifestyle), தவறான உணவுப் பழக்கம் ஆகியவை இளம் வயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கோடைகாலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் காரணம் அதிக வெப்பம் காரணமாக உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் உடலில் குளுக்கோஸ் செறிவூட்டப்பட்டு இரத்த சர்க்கரை உயரும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் குளுக்கோஸ் மெதுவாக வெளியேறும். மேலும் தண்ணீருக்கு மாற்றாக சூடான கிரீன் டீ அல்லது மூலிகை டீக்களையும் குடிக்கலாம். மூலிகை டீயில் சேர்க்கப்படும் இலவங்கப்பட்டையின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இன்சுலின் சிறப்பாக செயல்பட உதவுகின்றன. சிறிது இலவங்கப்பட்டை தூள் கலந்து சூடான நீரைக் குடிப்பதன் மூலம் சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க எளிய வழிகள்
- குறைந்த கிளைசெமிக் குறியீட்டு (GI) கொண்ட உணவுகள் இரத்தத்தில் குளுக்கோஸ் வெளியேறுவதை குறைக்கின்றன. காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகளில் அத்தகைய உணவுகளில் இத்தகைய பண்புகள் இருக்கும். இவை சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
- குறுகிய காலத்திற்கு ஏற்ற உடல் செயல்பாடுகளும் நல்ல பலனைத் தருகின்றன. உதாரணமாக சிறிய நடைபயிற்சி மற்றும் வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய உடற்பயிற்சிகள் இன்சுலின் செயல்திறனை மேம்படுத்தக் கூடும்.
- நார்ச்சத்து உடலில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது. ஓட்ஸ், ஆப்பிள் மற்றும் சியா விதைகள் போன்ற உணவுகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கின்றன.
- மன அழுத்தம் கார்டிசோல் என்ற ஹார்மோனை உருவாக்குகிறது. இது இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகிறது. அதனால்தான் தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வது அல்லது மூச்சு பயிற்சி செய்வது பதட்டத்தைக் குறைக்கும்.
- சாப்பிடுவதற்கு முன் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிப்பது இரத்த சர்க்கரை அதிகரிப்பதை மெதுவாக்க உதவும். இருப்பினும், இது உங்கள் மருத்துவரின் அனுமதிக்கு பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும்.
- வெள்ளை அரிசி, ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸை விரைவாக அதிகரிக்கின்றன. இதுபோன்ற உணவுகளைக் குறைத்து, உடலுக்கு குறைந்த கார்ப் உணவுகளை வழங்க வேண்டும்.
- முட்டை, கோழிக்கறி, பனீர் அல்லது போன்ற புரதம் நிறைந்த பொருட்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை ஆற்றலை வழங்குவதோடு குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமாக எதிர்வினையாற்றுகிறது. எந்த உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கின்றன என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றபடி ஒரு உணவுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இது நிலையான சர்க்கரை கட்டுப்பாட்டை பராமரிக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவு ஆபத்தான அளவில் உயரும்போது, நீங்கள் தாமதிக்காமல் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். நீங்களாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தானது.