AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

Healthy Eating Guide : பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக உள்ளன. அவை உடலை நோய்களிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆனால், வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது சரியா என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Jun 2025 23:20 PM IST

பழங்கள் இயற்கையாக கிடைக்கும் மிகவும் ஆரோக்கியமான உணவு. மருத்துவர்கள் தினமும் குறைந்தது இரண்டு பழங்களாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். சிலர் காலையில் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவார்கள். அவை விரைவாக ஜீரணமாகும் என்றும், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அவற்றின் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு சிறந்த முறையில் பயனளிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இது தவிர, பழங்கள் உடலுக்கு ஆற்றலையும் வழங்குகின்றன. குறிப்பாக ஒரு நாளின் தொடக்கத்தில் பழங்களை சாப்பிடுவது, உங்களை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கிறது. பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளது, இது வயிற்றை சுத்தமாகவும், செரிமான மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

வெறும் வயிற்றில் பழங்கள் நல்லதா? இல்லையா? என்ற கேள்வி சிலரின் மனதில் எழுகிறது. டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையின் இணைப் பேராசிரியர் டாக்டர் அஜித் ஜெயின் இது குறித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார். வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியையும் சக்தியையும் வழங்க ஒரு சிறந்த வழியாகும் என்று அவர் தெரிவிக்கிறார். உங்கள் செரிமான திறனுக்கு ஏற்ப எந்தெந்த பழங்கள் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும், அவற்றை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். சரியான நேரத்தையும் முறையையும் பின்பற்றுவதன் மூலம், பழங்களிலிருந்து முழுப் பலனைப் பெறலாம்.

வெறும் வயிற்றில் எப்போது பழங்களை சாப்பிடக்கூடாது?

  • உங்களுக்கு அமிலத்தன்மை அல்லது வாயு பிரச்சனை இருந்தால் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • உங்களுக்கு Irritable Bowel Syndrome எனப்படும் வயிறு எரிச்சல் பிரச்னை இருந்தால் பழங்களை வெறும் வயிற்றில், அதுவும் காலையில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  • வெறும் வயிற்றில் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை போன்ற சில சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

இத்தகைய சூழ்நிலையில் காலையில் லேசான காலை உணவை சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

வெறும் வயிற்றில் எந்த பழங்களை சாப்பிட வேண்டும்?

  • பப்பாளி பழம் வயிற்றை சுத்தம் செய்து, மலச்சிக்கலை நீக்குகிறது.
  • ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • தர்பூசணியில் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
  • கொய்யாப்பழம் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
  • பெர்ரி பழம் நமக்கு வயதான தோற்றத்தை தடுக்கும் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும்

பழங்களை சாப்பிட சரியான நேரம் எது?

  • காலை வெறும் வயிற்றில் ஆப்பிள், பப்பாளி, கொய்யா, தர்பூசணி போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம்
  • காலை உணவுக்குப் பிறகு வாழைப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.
  • மாலையில் மாதுளை, திராட்சை, சப்போட்டா பழங்களை சாப்பிடலாம்.

பழம் மற்றும் உணவுக்கு இடையில் குறைந்தது 30 நிமிட இடைவெளி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதனால் இரண்டும் சரியாக ஜீரணமாகும்.

Follow Us