Busy Woman’s Guide: வேலை செய்யும் பெண்களா நீங்கள்..? வேகமான சமையல் குறிப்புகள்..!
Time-Saving Kitchen Hacks: வேலை செய்யும் பெண்களின் காலை நேரம் மிகவும் பரபரப்பாக இருக்கும். இந்தக் கட்டுரை, காலை வேளையில் நேரத்தைச் சேமிக்கும் சமையல் குறிப்புகளை வழங்குகிறது. முன்கூட்டியே மசாலா பொருட்கள், மாவுகள் தயார் செய்தல், பாத்திரங்களை இரவில் சுத்தம் செய்தல் போன்ற குறிப்புகளை வழங்குகிறோம்.

அலுவலகம் செல்லும் பெண்களின் (Working Women) காலை வாழ்க்கை எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும். பல பெண்கள் காலையில் எழுந்ததும் பாத்திரம் துலக்குதல் முதல் சமையல் என பல வேலையையும் செய்கிறார்கள். தொடர்ந்து, சமைப்பது (Cooking) மட்டுமின்றி, தனக்கும், தங்களது கணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மதிய உணவை பேக் செய்கிறார்கள். இந்தநிலையில், வேலை வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டையும் சமநிலையுடன் வைக்க வேண்டும். ஆனால், இரண்டையும் சரியாக நிர்வகிக்க முடியாவிட்டால், வாழ்க்கையில் சிக்கல்கள் உண்டாகும். அந்தவகையில், இந்த குறிப்புகளைப் பின்பற்றினால் உங்கள் சமையல் வேலைகள் ஜெட் வேகத்தில் உங்களால் செய்ய முடியும்.
என்ன செய்யலாம்..?
தனித்தனியாக வையுங்கள்:
சமையலறையில் பயன்படுத்தப்படும் பொருட்களை டிபன், லன்ச், டின்னர் என தனித்தனியாக வகைப்படுத்தவும். சமைக்கும்போது அவற்றை முழுவதுமாக எடுத்து உங்களால் ஈஸியாக சமைக்க முடியும். அதேநேரத்தில், டீத்தூள், காபி, உப்பு மற்றும் மிளகாய்த் தூளை ஒரு கண்ணாடி கொள்கலனில் வைத்தால் ஒவ்வொரு முறை தேட வேண்டிய அவசியம் இருக்காது.
ALSO READ: பீங்கான் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தலாமா..? ஆரோக்கியத்திற்கு தீங்கா..?




ஒரு வாரத்திற்கு தேவையானவை:
உங்கள் விடுமுறை நாளில் ஒரு வாரத்திற்கு தேவையான அளவு தோசை மற்றும் இட்லி மாவை அரைக்கவும். அதேபோல், தினை இட்லி மற்றும் தோசை மாவையும் தயாரித்து வைத்து கொள்ளலாம். இவை ரெடியாக இருக்கும்போது குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து டக்கென்று தயாரித்து கொடுக்கலாம். அதேபோல், வீட்டில் எப்போதும் முட்டை மற்றும் பிரட் வைத்திருங்கள். வீட்டில் எதுவும் இல்லாதபோது, இவற்றைக் கொண்டு டிபன் செய்யலாம்.
எந்த சூழ்நிலையிலும் நீங்கள் இரவில் சாப்பிட்ட பாத்திரங்களை காலை வரை வைத்திருக்கக்கூடாது. காலையில் எழுந்ததும் அவற்றை சுத்தம் செய்வது உங்களுக்கு பெரிய வேலையாக இருக்கும். இரவில் பாத்திரங்களை சுத்தம் செய்தால், நிறைய நேரம் மிச்சமாகும்.
மசாலா தயாரிப்பு:
உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதிக அளவில் கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், புளியோதரை மிக்ஸ் மற்றும் தக்காளி கூழ் ஆகியவற்றை செய்து வைத்து கொள்ளுங்கள். இவையே நீங்கள் பெரும்பாலும் சமைக்க தேவையான மசாலா பொருட்கள் ஆகும். இதைச் செய்வது நமக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும். பச்சை மற்றும் காய்ந்த மிளகாயின் காம்புகளை எடுத்து வைத்து கொள்வதும், உங்கள் அன்றாட மன அழுத்தத்தைக் குறைக்கும்.
ALSO READ: சுவையான டீ எப்படி தயாரிப்பது..? இப்படி ட்ரை செய்தால் ருசி அமோகம்!
சாப்பர்கள்:
காய்கறிகளை நறுக்க கத்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கடைகளில் கிடைக்கும் பல வகையான சாப்பர்கள், கிரேட்டர்கள் மற்றும் ஸ்லைசர்கள் கிடைக்கின்றன. இவை உங்களுக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும். உங்களுக்கும் காயம் ஏற்படாது.