Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Porcelain Cookware: பீங்கான் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தலாமா..? ஆரோக்கியத்திற்கு தீங்கா..?

Porcelain Cookware Safety Guidelines: பீங்கான் பாத்திரங்கள் நீண்ட வரலாறு கொண்டவை என்றாலும், அவற்றின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் உள்ளன. நல்ல தரமான பீங்கான் பாத்திரங்கள் நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் போல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை கொண்டிருக்காது. ஆனால், ஈயம் அல்லது காட்மியம் போன்ற கன உலோகங்கள் சேர்க்கப்பட்ட மலிவான பீங்கான் பாத்திரங்களைத் தவிர்க்க வேண்டும்.

Porcelain Cookware: பீங்கான் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தலாமா..? ஆரோக்கியத்திற்கு தீங்கா..?
பீங்கான் பாத்திரங்கள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Aug 2025 17:48 PM

இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலும் நமது சமையலறைகளில் (Kitchen) எஃகு மற்றும் நான் – ஸ்டிக் சமையல் (Non Stick Pan) பாத்திரங்கள் பிரபலமாக உள்ளது. ஆனால், நான் – ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சமைக்கப்படுவது உடல் நலத்திற்கு தீங்கு தரும் என்றும், இவை ஆரோக்கியத்திற்கு மோசமானவை என்றும் கூறப்படுகிறது. இதற்கு பதிலாக, எஃகு சமையல் பாத்திரங்கள் எல்லா வகையிலும் பாதுகாப்பானவை. கண்ணாடி சமையல் பாத்திரங்கள் பாதுகாப்பானவை என்றாலும், இவை கையாள தெரியவில்லை என்றால் உடைந்துபோகும். மண்ணால் செய்யப்படும் சமையல் பாத்திரங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் அதை பராமரிப்பதும் கடினமான விஷயமாகும். இரும்பு பாத்திரங்கள் என்று அழைக்கப்படும் தாமிரம் மற்றும் வெண்கலம் பாத்திரங்கள் இன்றைய காலத்தில் பெரும்பாலும் பயன்படுத்துவது கிடையாது. இப்போது, பீங்கான் சமையல் பாத்திரஙக்ளை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மழைக்காலத்தில் சமைக்கும் பொருளை நாசம் செய்யும் ஈரப்பதம்.. பாதுகாப்பது எப்படி..?

பீங்கான் பாதுகாப்பானதா..?

பீங்கான் பொருட்களின் பயன்பாடு என்பது ஒன்றும் புதிதல்ல. இது கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அதன்படி, இந்த பொருட்கள் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட வரலாற்றை கொண்டுள்ளன. பீங்கான்களில் பாலிடெய்ராஃப்ளூரோ எத்திலீன் மற்றும் பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் இல்லை. இந்த இரசாயனங்கள் பொதுவாக நான் – ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் காணப்படுகின்றன. அந்தவகையில், பீங்கான்கள் ஈயம் மற்றும் காட்மியம் போன்ற தீங்கு விளைவிக்கும் உலோகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

சில பீங்கான் பானைகள் அழகாகக் காட்ட, அவற்றின் மேற்பரப்பில் ஈயம், காட்மியம், பேரியம் போன்ற தீங்கு விளைவிக்கும் உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே, பீங்கான்களின் தரத்தை உறுதி செய்வது முக்கியம். சில கடைகளில் கிடைக்கும் மலிவான பீங்கான்களை வாங்கிப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தரத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். அலங்காரத்திற்காக மஞ்சள், சிவப்பு, நீலம் போன்ற அடர் நிறங்களைப் பயன்படுத்தும் பானைகளில் ஈயம் மற்றும் பிற கன உலோகங்களும் இருக்கலாம். இதன் காரணமாக, கவனத்துடன் பயன்படுத்துவது முக்கியம்.

இவற்றைப் பயன்படுத்தும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். இவற்றைப் பயன்படுத்தும் போது உடைந்திருந்தாலோ, கீறல் இருந்தாலோ, இவற்றின் மேற்பரப்பு சேதமடைந்திருந்தால், அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. எல்லா பீங்கான் சமையல் பாத்திரங்களும் அடுப்பில் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. பேக்கேஜிங்கில் “அடுப்புக்கு பாதுகாப்பானது” என்று உறுதி செய்யப்பட்டிருந்தால் மட்டுமே சமைக்க வேண்டும்.

ALSO READ: சமையல் எண்ணெய் வாங்கப்போறீங்களா? இந்த 3 விஷயங்களை கவனிங்க!

சில வகையான பீங்கான்கள் சூடான உணவுகளை பரிமாற மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சமைக்க ஏற்ற வகையிலான பீங்கான் பாத்திரங்கள் இருந்தால் ஒரே நேரத்தில் மிக வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தக்கூடாது. பீங்கான் பாத்திரங்களை பொறுத்தவரை 180°C க்கும் அதிகமான வெப்பநிலைக்கு ஏற்றதா என்பதைப் பார்க்க, அந்தந்த பொருளின் கைடுகளை பின்பற்றி சமைக்கலாம்.