இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? அப்போ நீங்க தனிமையில் இருக்கிறீர்கள்!
Loneliness Awareness : தனிமை சில நேரங்களில் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து தனிமையில் இருப்பது எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும். நாம் தனிமையில் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் குறித்தும் அதனை தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

தனிமை (Loneliness) சில நேரங்களில் வரம். ஆனால் அதற்கு அடிமையானால் வாழ்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக தினசரி நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக நேரம் தனிமையில் இருப்பது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கிறது. குறிப்பாக தற்போது சமூக வலைதளங்களில் (Smartphone) அதிக நேரம் செலுத்துவதன் காரணமாக, மக்களுடன் இணைந்து வாழும் பழக்கம் குறைந்து வருகிறது. சிலருக்கு நாம் தனிமையில் இருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் தனிமையின் பிடியில் இருக்கிறோமோ இல்லையா என்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது குறித்து பார்க்கலாம்.
பேசுவது குறையும்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் எல்லாவற்றையும் பகிரும் பழக்கத்தின் காரணமாக, நேரடியாகப் பேசுவதற்கான வாய்ப்புகளைக் குறைத்துவிட்டது. பலர் நேருக்கு நேர் பேசுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நீங்கள் பேசினாலும், அவர்களுடன் உங்களுக்கு வலுவான தொடர்பு இல்லை என்று நீங்கள் உணர்ந்தால், அது தனிமையின் அறிகுறியாக இருக்கலாம்.
இதையும் படிக்க : மன அழுத்தத்தைக் குறைக்க 5-4-3-2-1 கிரவுண்டிங் டெக்னிக்: பதட்டத்தை உடனே தணிக்கும் எளிய முறை!




தேவையில்லாமல் யோசிப்பது
உங்கள் மனதில் ஒரு சிறிய விஷயத்தைப் பற்றி பல முறை யோசிப்பதும் தனிமையின் அறிகுறியாகும். நீங்கள் தொலைபேசியில் பேச விரும்பினால், முதலில் என்ன சொல்ல வேண்டும் என்று நீண்ட யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் மனதளவில் தனிமையாகி வருகிறீர்கள் என்று அர்த்தம்.
தெளிவு இல்லாமை
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது பற்றிய தெளிவின்மை, எங்கு செல்வது என்பது பற்றிய குழப்பம் ஆகியவை தனிமையின் அறிகுறியாகும். அவ்வப்போது இதை உணருவது இயல்பானது. ஆனால் நீங்கள் அடிக்கடி இப்படி உணர்ந்தால், உங்கள் தன்னம்பிக்கை குறைந்துவிட்டதாகக் கூறலாம்.
இதையும் படிக்க : அதிகம் பேசும் நபராக நீங்கள்? நல்ல லிசனராக மாறுவதால் ஏற்படும் நன்மைகள்
இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணர்ந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு இயற்கையான மன எதிர்வினையாக இருக்கலாம்.. ஆனால் அதை அடையாளம் கண்டு மெதுவாக அதிலிருந்து விலகிச் செல்வது முக்கியம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் தொடர்பை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒருபோதும் தனியாக உணரக்கூடாது. அது உங்கள் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தயங்குவது வேலை, வாழ்க்கை இரண்டிலுமே உங்களால் வெற்றிகரமான நபராக இயங்க முடியாது.