Vitamin C Deficiency: வைட்டமின் சி உடலுக்கு ஏன் அவசியம்? இதன் அளவை எவ்வாறு அதிகரிப்பது?
Boost Immunity with Vitamin C: வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்து. இதன் குறைபாடு சோர்வு, வறண்ட சருமம், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொய்யா, எலுமிச்சை, கீரை போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின் சி நிறைந்தவை ஆகும்.

ஆரோக்கியமாக இருக்க நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க வேண்டும். இது மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க பெரிதும் உதவும். அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மிக முக்கியமானது. ஒருவரின் உடலில் வறண்ட சருமம், முடி உதிர்தல் மற்றும் அடிக்கடி தொற்றுகள் ஏற்பட்டால் அது வைட்டமின் சியின் அறிகுறிகளாக இருக்கலாம். கொரோனா காலத்தில் வைட்டமின்-சி அடிக்கடி பேசப்பட்டது. பொதுவாகவே, வைட்டமின் சி (Vitamin C) மாத்திரைகள் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சுகாதார நிபுணர்களும் இந்த வைட்டமின் மிகவும் முக்கியமானதாக கருதுகின்றனர். இதன் குறைபாட்டால் எந்த நோய் ஏற்படலாம், என்ன அறிகுறிகள் காணப்படுகின்றன. என்ன சாப்பிடுவதன் மூலம் இதை அதிகரிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
வைட்டமின் சி உடலுக்கு ஏன் அவசியம்?
இரத்தத்தை அதிகரிக்கும்:
வைட்டமின் சி இரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கும்போது, அதை ஈடுசெய்ய இரும்புச்சத்துடன் வைட்டமின் சி வழங்கப்படுகிறது. ஏனெனில் இது இரும்புச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. வைட்டமின் சி உதவியுடன் எலும்புகள் வலுவடைகின்றன.
ALSO READ: உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகளை டிரை பண்ணுங்க!




தாய்ப்பால்:
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் போதுமான அளவு வைட்டமின் சி தேவைப்படுகிறது. இயற்கையாகவே, வைட்டமின் சி தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும்.
தைராய்டு:
தைராய்டு பிரச்சனையை தவிர்க்க, உடலுக்கு போதுமான வைட்டமின் சி தேவைப்படுகிறது. வைட்டமின் சி உதவியுடன், தைராய்டு ஹார்மோன்கள் உடலுக்கு சரியாகச் செயல்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி:
கொரோனா காலத்தில் பெரும்பாலான மக்கள் மிகவும் நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அதன்படி, வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு முக்கிய அங்கமாகும்.
ALSO READ: உடலில் நீர் பற்றாக்குறையை எவ்வாறு கண்டறிவது? முக்கிய 7 அறிகுறிகள் இதுதான்!
பற்கள் மற்றும் எலும்புகளின் பலவீனம்:
ஒருவரின் உடலில் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், அவர்களுக்கு அடிக்கடி பற்கள், ஈறுகள் மற்றும் எலும்புகளில் வலி ஏற்படும்.
சருமம் மற்றும் முடி:
வைட்டமின் சி என்பது நமது சருமத்தின் தரத்தையும் முடியையும் மேம்படுத்தும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். வறண்ட சருமம் மற்றும் தோலில் நீல நிற புள்ளிகள் இருப்பதும் வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
வைட்டமின் சி குறைபாட்டின் 5 அறிகுறிகள்
- தொடர்ச்சியான சோர்வு
- உதடுகள் மற்றும் தோல்களில் வறட்சி
- தோலில் நீலம் மற்றும் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல்
- குழந்தைகளின் எலும்புகள் பலவீனமடைதல்
- காயங்கள் விரைவாக குணமடையாது
வைட்டமின் சி அளவை எவ்வாறு அதிகரிப்பது?
இயற்கையாகவே உடலில் வைட்டமின்-சியை அதிகரிக்க, நாம் தொடர்ந்து சில பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். இதன் காரணமாக கொய்யா, எலுமிச்சை, ஸ்ட்ராபெரி, கிவி மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம். சிவப்பு-பச்சை கேப்சிகம், கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற இலை காய்கறிகளும் வைட்டமின்-சியின் நல்ல மூலமாக பார்க்கப்படுகிறது. அதேபோல், பால் பொருட்களுடன் தயிர் சாப்பிடுவதும் நன்மை பயக்கும்.