Health Tips: சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா?
Can Diabetics Eat Mangoes: மாம்பழங்களில் அதிக சர்க்கரை இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பிரச்சனையாக அமையும். இருப்பினும், சிறிதளவில் மாம்பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாம்பழங்களை மிதமாக சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.
பெரும்பாலான மக்களுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். பலருக்கும் மாம்பழத்தின் பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறும். இதன் காரணமாகதான் மாம்பழம் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் (Diabetic patients) மாம்பழத்தை (Mangos) சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மாம்பழத்தில் அதிக அளவு இயற்கை சர்க்கரை உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு உயர் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அந்தவகையில், சர்க்கரை நோயாளிகள் ஏன் மாம்பழத்தை சாப்பிடக்கூடாது என்பதை முழுமையாக தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?
மாம்பழங்களில் அதிக சர்க்கரை இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பிரச்சனையாக அமையும். இருப்பினும், சிறிதளவில் மாம்பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாம்பழங்களை மிதமாக சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. நன்கு கட்டுப்படுத்தப்பட்ட இரத்த சர்க்கரை அளவைக் கொண்ட சர்க்கரை நோயாளிகள் மாம்பழங்களை உட்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ALSO READ: சர்க்கரை நோயாளிகளுக்கு தோள்பட்டை வலி ஏன்..? மருத்துவர் ராஜா விளக்கம்!




ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழங்கள்:
மாம்பழங்களில் சர்க்கரை அதிகமாக இருந்தாலும், கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. மாம்பழத்தில் அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவற்றில் நல்ல அளவு வைட்டமின்கள் ஈ, கே மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ளன. மேலும், இதில் அதிக நார்ச்சத்து, நல்ல அளவு கால்சியம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன.
எவ்வளவு மாம்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானது?
இரத்த சர்க்கரை அதிகரிப்பதை தவிர்க்க, ஒரே நேரத்தில் அதிக மாம்பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் இருக்க, 1/2 கப் எடுத்து கொள்ளலாம். தினமும் இந்த அளவில் மாம்பழங்களை தவறாமல் உட்கொள்வது அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நோயைத் தடுக்க உதவும். இருப்பினும், அதிகமாக மாம்பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மாம்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன..?
மாம்பழம் சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்து நிறைந்த பழம். இதில், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான சருமம் மற்றும் கண்களை பராமரிக்கின்றன. மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும்.
ALSO READ: உயர் இரத்த அழுத்தம் இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
மாம்பழம் சாப்பிட சிறந்த நேரம் எது..?
சர்க்கரை நோயாளிகள் பகலில் மாம்பழங்களை உட்கொள்வது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடலின் வளர்சிதை மற்றும் பொதுவாக இரவை விட பகலில் அதிகமாக இருக்கும். எனவே, மாம்பழம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிக்காது.