Health Tips: சர்க்கரை நோயாளிகளுக்கு தோள்பட்டை வலி ஏன்..? மருத்துவர் ராஜா விளக்கம்!
Diabetes Shoulder Pain: சர்க்கரை நோயாளிகளின் நாள்பட்ட உயர் இரத்த சர்க்கரை இணைப்பு திசுக்களை கஷ்டப்படுத்தி, தோள்பட்டை மூட்டில் இயக்கத்தை மட்டுப்படுத்தி வலியை ஏற்படுத்தும். சர்க்கரை நரம்பியல் தோள்பட்டை மூட்டில் இயக்கத்தை மட்டுப்படுத்தி வலியை அதிகரிக்கும். உயர் இரத்த சர்க்கரை தோள்பட்டை வீக்கம் மற்றும் விறைப்பை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோய் (Diabetes) என்பது அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படும் ஒரு நோயாகும். இந்த நோயில் சர்க்கரை உடலுக்கு விஷமாக மாறி, உடல் பல நோய்களுக்கு ஆளாக தொடங்குகிறது. சர்க்கரை நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், இதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இரத்த சர்க்கரையை நீண்ட காலமாக கட்டுப்படுத்தாவிட்டால் இதயம் (Heart), சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற உடலின் முக்கிய உறுப்புகள் சேதமடைகின்றன. அதிக இரத்த சர்க்கரை காரணமாக சர்க்கரை நோயாளிகளை தொந்தரவு செய்யும் மற்றொரு பிரச்சனை தோள்பட்டை வலியும் ஒன்று. அந்தவகையில், சென்னையில் உள்ள ராயல் மல்டி கேர் ஹாஸ்பிட்டல் மருத்துவமனையின் மருத்துவர் ராஜா சர்க்கரை நோயால் ஏற்படும் தோள் பட்டை வலி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: குழந்தைக்கு எந்த வயதில் அசைவம் கொடுக்க தொடங்கலாம்..? மருத்துவர் அருண் குமார் விளக்கம்!




சர்க்கரை நோயாளிகளுக்கு தோள்பட்டை வலி ஏன் ஏற்படுகிறது..?
View this post on Instagram
சர்க்கரை நோயாளிகளுக்கு தோள்பட்டை வலி ஏற்படுவதற்கு காரணம் உறைந்த தோள்பட்டை ஒரு முக்கிய காரணமாகும். சர்க்கரை நோயாளிகளிடையே தோள்பட்டை வலி ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. உறைந்த தோள்பட்டை என்பது தோள்பட்டை மூட்டின் இயக்க வரம்பு குறைந்து தோள்பட்டை விறைப்பாக மாறும் ஒரு நிலையாகும். இந்த நிலை வீக்கம், வலி மற்றும் விறைப்பை ஏற்படுத்துகிறது. இதனால், நகர்த்துவதற்கும் எந்த செயலும் செய்வது கடினமாக மாறும்.
சர்க்கரை நோயாளிகளின் நாள்பட்ட உயர் இரத்த சர்க்கரை இணைப்பு திசுக்களை கஷ்டப்படுத்தி, தோள்பட்டை மூட்டில் இயக்கத்தை மட்டுப்படுத்தி வலியை ஏற்படுத்தும். சர்க்கரை நரம்பியல் தோள்பட்டை மூட்டில் இயக்கத்தை மட்டுப்படுத்தி வலியை அதிகரிக்கும். உயர் இரத்த சர்க்கரை தோள்பட்டை வீக்கம் மற்றும் விறைப்பை ஏற்படுத்தும்.
ALSO READ: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா..? டாக்டர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!
உறைந்த தோள்பட்டையின் அறிகுறிகள்:
- இரவு நேரத்தில் தோள்பட்டையில் கடுமையான வலி ஏற்படும்.
- தோள்பட்டையில் விறைப்பு, கையை தூக்கவோ அல்லது சுழற்றவோ கடினமாக்குகிறது.
- தோள்பட்டையில் லேசான அல்லது கடுமையான வீக்கம் மற்றும் சிவத்தல் போன்றவை ஏற்படும்.
- தோள்பட்டை இயக்க வரம்பில் படிப்படியாக குறைவை உள்ளடக்கியது.
தோள்பட்டை வலியை தடுக்க என்ன செய்யலாம்..?
- சர்க்கரை நோயாளிகள் தோள்பட்டை வலி, வீக்கம் மற்றும் விறைப்புத்தன்மைக்கு சிகிச்சையளிக்க பிசியோதெரபி செய்ய வேண்டும்
- ஸ்டீராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தலாம். வலி கடுமையாக இருந்தால், உங்கள் மருத்துவர் கார்டிகோஸ்டீராய்டு ஊசியை பரிந்துரைக்கலாம்.
- தோள்பட்டை வலிக்கு சிகிச்சையளிக்க சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது தோள்பட்டை வலியை கட்டுப்படுத்த உதவும்.
- தோள்பட்டை வலியை கட்டுப்படுத்த உடற்பயிற்சியுடன், சீரான உணவை உட்கொள்வதும் முக்கியம்.