Blocked Nose: சளியால் மூச்சு விட சிரமமா..? மூக்கு அடைப்பை சரிசெய்யும் எளிய டிப்ஸ்!
How To Get Rid Of Blocked Nose: மழை மற்றும் குளிர் காலத்தில் சூரிய ஒளி இல்லாததால் உடலில் வைட்டமின் டி அளவு குறைய தொடங்குகிறது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திய பாதிக்கிறது. இதனால், நமக்கு எளிதாக காய்ச்சல், சளி, மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை வலி போன்றவை உண்டாகும்.

மழை (Rainy Season) மற்றும் குளிர்காலத்தில் அனைவரும் சளி, மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை வலியை சந்திப்போம். மழை மற்றும் குளிர் காலத்தில் சூரிய ஒளி இல்லாததால் உடலில் வைட்டமின் டி அளவு குறைய தொடங்குகிறது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திய பாதிக்கிறது. இதனால், நமக்கு எளிதாக காய்ச்சல் (Fever), சளி, மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை வலி போன்றவை உண்டாகும். இதில், மூக்கு அடைப்புதான் பெரிய தொல்லையாக மாறும். மூக்கில் அடைப்பு என்பது சளி பிடித்தால் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது ஒருவகையில் பயங்கரமாக எரிச்சலை கொடுக்கும். அந்தவகையில், மூக்கு அடைப்பை எளிதாக சரிசெய்யும் வீட்டு குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: மழைக்காலத்தில் இவை ஆரோக்கியமற்ற காய்கறிகள்.. ஏன் இவற்றை தவிர்க்க வேண்டும்..?
மஞ்சள் பால்:
மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மருந்தாகும். இந்த சூடான பால் குடிப்பது உடலில் வீக்கத்தைக் குறைக்கிறது, தொற்றுகளைத் தடுக்கிறது மற்றும் விரைவான மீட்சிக்கு உதவுகிறது. இது மூக்கடைப்பை நீக்குகிறது மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.




சூடான லெமன் – தேன் வாட்டர்:
சூடான தேன் கலந்த எலுமிச்சை தண்ணீர் உடல நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இது தொண்டை எரிச்சலை நிறுத்துவதுடன், சளியை மெல்லியதாக்குகிறது. தேனில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, இது எலுமிச்சையின் வைட்டமின் சி நிறைந்த பண்புகளுடன் இணைந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சளி பிரச்சனையையும் சரி செய்கிறது.
ஹாட் பேக் மசாஜ்:
உங்கள் நெற்றி மற்றும் மூக்கை சுற்றி சூடான நீரில் அமுக்கப்பட்ட சுத்தமான துணியை பிழிந்து வைக்கலாம். இது மூக்கில் அடைப்பை போக்கவும். இப்படி செய்வதன்மூலம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி எளிதாக சுவாசிக்க உதவி செய்யும்.
ஆவி பிடித்தல்:
சூடான நீர் கொண்டு ஆவி பிடிக்கும் முறை பல நூற்றாண்டுகளாக பாட்டி வைத்தியமாக இருந்து வருகிறது. அதன்படி, இவ்வாறு செய்வது மூக்கு அடைப்பை சரிசெய்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. மேலும், காய்ச்சல் போன்றவற்றையும் சரி செய்யும்.
ALSO READ: மாறும் வானிலை.. ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
யூகலிப்டஸ் அல்லது மிளகுக்கீரை எண்ணெய்:
யூகலிப்டஸ் அல்லது மிளகுக்கீரை எண்ணெய்களில் மெந்தோல் போன்ற சேர்மங்கள் உள்ளன. இவை சுவாசப் பாதைகளை எளிதாக திறந்து சுவாசிக்க உதவி செய்யும். இதன் ஒரு துளி எண்ணெயை சூடான நீரில் ஊற்றி ஆவி பிடிக்கலாம். அப்படி இல்லையென்றால், தேங்காய் எண்ணெயுடன் கலந்து மூக்கு அல்லது மார்புக்கு அருகில் தடவலாம். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சூடான இஞ்சி டீ:
இஞ்சியில் ஆன்டிவைரல் பண்புகள் உள்ளன. இந்த மூலிகை டீ தொண்டையை ஆற்றுவதோடு சளியை உடைக்கவும் உதவுகிறது. இது மூக்கடைப்பைக் குறைக்கிறது மற்றும் சளி மற்றும் மூக்கில் அடைப்பு ஏற்பட்டால் விரைவாக குணமடைய உதவுகிறது