Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: சிறுநீரக கற்கள் மீண்டும் வருமோ என்ற பயமா..? வராமல் தடுக்க செய்ய வேண்டியவை..!

Kidney Stone Recurrence: சில வாழ்க்கை முறை (Lifestyle) மாற்றங்களை பின்பற்றுவதன்மூலம் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கலாம். அந்தவகையில், சிறுநீரகக் கற்கள் மீண்டும் வராமல் தடுக்க உங்கள் வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம். 

Health Tips: சிறுநீரக கற்கள் மீண்டும் வருமோ என்ற பயமா..? வராமல் தடுக்க செய்ய வேண்டியவை..!
சிறுநீரக கற்கள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Dec 2025 17:46 PM IST

சிறுநீரகக் கற்கள் (Kidney Stones) கால்சியம் அல்லது சோடியம் ஆக்சலேட் போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீரக குழாய்களில் படிவதால் ஏற்படுகின்றன. இது உருவாகும்போது, வயிற்றின் அடிப்பகுதி மற்றும் முதுகு பகுதிகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும். ஒருவருக்கு ஒரு காலத்தில் சிறுநீரகக் கற்கள் உருவாகி இருந்தால், மீண்டும் அவை உருவாகும் அபாயம் அதிகம். இதனால், பலரும் தங்கள் வாழ்க்கையில் எங்கே வந்துவிடுமோ என்று அச்சம் கொள்கிறார்கள். நீங்களும் அப்படி தினமும் பயம் கொள்கிறீர்கள் என்றால், கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் சில வாழ்க்கை முறை (Lifestyle) மாற்றங்களை பின்பற்றுவதன்மூலம் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கலாம். அந்தவகையில், சிறுநீரகக் கற்கள் மீண்டும் வராமல் தடுக்க உங்கள் வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இரவில் இந்த 5 பழக்கங்கள் போதும்.. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்..!

தண்ணீர் குடித்தல்:

சிறுநீரகக் கற்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்க நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிக தண்ணீர் குடிப்பது சிறுநீரை மெல்லியதாக வைத்திருக்கும், அடர்த்தியாவதை தடுக்கும். தண்ணீர் சிறுநீரகங்களில் தாதுக்கள் மற்றும் உப்புகள் சேராமல் தடுத்து கற்கள் உருவாகாமல் தடுக்கும். அதன்படி, ஒரு நாளைக்கு குறைந்தது 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். கோடை காலமாக இருந்தாலும் சரி, மழை மற்றும் குளிர் என எந்த காலமாக இருந்தாலும் சரி, அதிகமாக தண்ணீர் குடிக்கவும்.

உங்கள் சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் அல்லது வெளிர் நிறமாக வெளியேறினால். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பீர்கள் என்று அர்த்தம். உங்கள் தண்ணீர் மட்டும் குடிக்க பிடிக்கவில்லை என்றால், எலுமிச்சை நீர், இளநீர் மற்றும் சில மூலிகை டீயை குடிக்கலாம்.

உப்பை குறைக்கலாம்:

அதிகமாக உப்பு சார்ந்த உணவுகளை எடுத்து கொள்வது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஏனெனில் உப்பில் உள்ள சோடியம் சிறுநீரில் கால்சியத்தை அதிகரிக்கிறது. இது கல் உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. சிப்ஸ், ஸ்நாக்ஸ், சிக்கன் ரைஸ், ரெடி டூ ஈட் நூடுல்ஸ், ஊறுகாய் மற்றும் துரித உணவு போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதால், அவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.

புரத உணவுகளை குறைத்தல்:

மட்டன், சிக்கன், மீன் மற்றும் முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் சிறுநீரில் கால்சியம் மற்றும் யூரிக் அமிலம் அதிகரித்து சிட்ரேட் குறைகிறது. இது கல் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இந்த உணவுகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும், அதிகமாக உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தலாம். உங்கள் அதிகபடியான புரதம் என்றால், அசைவ உணவுகளுக்கு பதிலாக பருப்பு, பீன்ஸ், நட்ஸ், பால் மற்றும் தயிர் போன்றவற்றையும் எடுத்து கொள்ளலாம்.

ALSO READ: சர்க்கரை நோய்க்கு பயம் கொடுக்கும்.. இந்த 4 உணவு பொருட்கள் போதும்!

சிட்ரஸ் பழங்கள்:

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் இயற்கையாகவே சிட்ரேட் உள்ளது. சிட்ரேட் சிறுநீரில் கால்சியத்துடன் பிணைந்து கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. தினமும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது ஒரு நல்ல பழக்கம். மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவு உடலுக்கு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்தை வழங்குகிறது. இது கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, கீரை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, ப்ரோக்கோலி மற்றும் தர்பூசணி போன்ற உணவுகளும் மிகவும் நன்மை பயக்கும்.