Kidney Health: குளிர்காலத்தில் குறையும் நீர்ச்சத்து.. சிறுநீரக கற்கள் வருவதற்கான அறிகுறிகள் இதுதான்!
Winter Kidney Health: சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறைவாக தண்ணீர் குடிப்பதே ஆகும். உப்பு, புரதம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட காற்று மற்றும் குறைவான வியர்வை தாகத்தையும் குறைக்கிறது.
வெப்பநிலை குறைந்த காலக்கட்டங்களில் அதாவது மழை மற்றும் குளிர்காலத்தில் பலரும் குறைவான அளவு தண்ணீர் குடிக்கிறார்கள். இது நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தி, நாளடைவில் சிறுநீரகக் கற்கள் (Kidney Stone) உருவாக காரணமாக அமைந்து விடுகிறது. சிறுநீரகக் கற்கள் என்பது கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் (Uric Acid) போன்ற தாதுக்களால் ஆன கடினமான படிகங்கள் ஆகும். இவை சிறுநீரகங்களில் படிந்து கற்களாக மாறுகின்றன. இது சிறுநீர் பாதை வழியாகச் செல்லும்போது, இவை மிகுந்த வலியையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
ALSO READ: கண்களில் வீக்கமா..? அரிப்பா..? சிறுநீரக செயலிழப்பின் எச்சரிக்கைகள்!
சிறுநீரக கற்கள் உருவாக காரணம் என்ன..?
சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறைவாக தண்ணீர் குடிப்பதே ஆகும். உப்பு, புரதம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட காற்று மற்றும் குறைவான வியர்வை தாகத்தையும் குறைக்கிறது. இதனால், குறைந்த அளவில் தண்ணீர் எடுத்து கொள்கிறோம். இது சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.




உடல் பருமன், சர்க்கரை நோய் அல்லது மூட்டுவலி போன்ற நோய்களின் மருத்துவ வரலாறு உள்ளவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகம்.
சிறுநீரக கற்களின் அறிகுறிகள் என்ன?
உடலில் சிறுநீரக கற்கள் தோன்றும்போது கீழ் முதுகு அல்லது வயிற்றில் கடுமையான வலி, சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு, குமட்டல் அல்லது வாந்தி, நுரை அல்லது சிவப்பு நிற சிறுநீர், மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கடுமையான சிறுநீரக பாதிப்பு அல்லது தொற்று ஏற்படலாம். சிறுநீரக கற்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பது முக்கியம்.
சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்..?
- தாகம் இல்லாவிட்டாலும் தினமும் 10 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
- வெதுவெதுப்பான நீர் அல்லது புதினா அல்லது செம்பருத்தி போன்ற மூலிகை தேநீர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதிகப்படியான சோடியம் சிறுநீரில் கால்சியம் சேர காரணமாகிறது. எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
- எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உள்ளடக்கிய சத்தான உணவை உண்ணுங்கள், இது சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது.
- உங்கள் சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து, ஏதேனும் அசாதாரணங்களைக் கண்டால் ஒரு நிபுணரை அணுகவும்.
- உங்கள் சிறுநீரில் வலி, எரிச்சல் அல்லது இரத்தம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.
ALSO READ: குளிர்காலத்தில் காலையில் இந்த உணவுகளா? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு!
குளிர்காலத்தில் நீரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் போது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். எனவே ஆரோக்கியமான பானங்களை குடிப்பது, சத்தான உணவை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க உதவும்.