மலையாள நடிகர் உன்னி முகுந்தன், இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் பாரம்பரிய நிகழ்வாகும்.