Karuppu: ‘காத்திருப்பிற்கு ஒர்த்தான படம் கருப்பு’ – அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!
Sai Abhyankkar Karuppu Movie Update: தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் சாய் அபயங்கர். இவர் நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக இசையமைத்துவரும் நிலையில், இப்படம் குறித்த தாறுமாறான அப்டேட்டை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). கடந்த 2025 மே மத்தில் வெளியான இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருந்தார். இந்த படமானது கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பின் சூர்யாவிற்கு வெற்றி திரைப்படமாகவே அமைந்திருந்தது. இந்த படத்தை அடுத்து இவர் ஒப்பந்தமாகி நடித்துவந்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இப்படம் ஆரம்பத்தில் சூர்யா45 என அழைக்கப்பட்டுவந்தது. இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி (RJ.Balaji) இயக்கிவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2024ம் ஆண்டு நவம்பரில் தொடங்கிய நிலையில், தற்போது ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.
இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், தற்போது இப்படம் குறித்து இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: ‘வித் லவ்’ படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தொலைக்காட்சி?
கருப்பு திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்
Just saw the final out of K 🖤
Will be worth the wait ! 🧨@Suriya_offl 💥 @RJ_Balaji 💥— abhyankkar (@SaiAbhyankkar) January 31, 2026
சமீபத்தில் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்ட சாய் அப்யங்கர், அகில் “சூர்யாவின் கருப்பு படத்தின் இறுதி அவுட்புட்டை இப்போதுதான் பார்த்ததாகவும், இப்படம் காத்திருப்பிற்கு சிறந்த திரைப்படமாக இருக்கும் என அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த கருப்பு படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை இப்படத்திலிருந்து 1 பாடல் மட்டுமே வெளியாகியிருக்கிறது. ஆரம்பத்தில் இப்படத்தை 2026 ஜனவரி இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், ஜன நாயகன் பட ரிலீஸ் ஒத்திவைப்பேன் காரணமாக இன்னும் சரியான ரிலீஸ் தேதியை உறுதி செய்யவில்லை.
இதையும் படிங்க: ரசிகர்களிடையே வைரலாகும் பிரபு தேவா – வடிவேலு நடிக்கும் பேங் பேங் படத்தின் டைட்டில் டீசர்
பின் இப்படம் 2026 பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், அடுத்தகட்ட திட்டமாக படக்குழு இப்படத்தை வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் ரிலீஸை தொடர்ந்து சூர்யா தெலுங்கில் நடித்துள்ள சூர்யா46 படமும் வெளியாகும் என வட்டாரங்கள் கூறுகிறது.