கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம், இன்று முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளதால், அதிகமான ரசிகர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முன்னணி தமிழ் நடிகரின் படம், இவ்வளவு குறுகிய காலத்திற்குள் டிஜிட்டல் தளத்திற்கு வருவது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.