IND vs NZ 5th T20: 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சூர்யா படை.. 4-1 என்ற கணக்கில் தொடரை வென்ற இந்தியா!
IND vs NZ 5th T20 Highlights: இந்தியா - நியூசிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றும் அசத்தியது.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5வது (IND vs NZ 5th T20) மற்றும் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றும் அசத்தியது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான கடைசி தொடரை வென்றது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா ஏற்கனவே தொடரை வென்றிருந்தது. இருப்பினும், நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இருப்பினும், இந்திய அணி (Indian Cricket Team) ஒரு பெரிய வெற்றியுடன் தொடரை முடித்தது. தொடரின் இறுதிப் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 41 பந்துகளில் சதமடித்த இஷான் கிஷன்! இந்திய அணி 271 ரன்கள் குவிப்பு..!




271 ரன்களை குவித்த இந்திய அணி:
5th T20I. India Won by 46 Run(s) https://t.co/AwZfWUTBGi #TeamIndia #INDvNZ #5thT20I @IDFCfirstbank
— BCCI (@BCCI) January 31, 2026
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர், ஆனால் இருவரும் 42 ரன்களுக்குள் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர். பின்னர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் செய்து, 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் உட்பட 103 ரன்கள் எடுத்து தனது அற்புதமான சதத்தை பூர்த்தி செய்தார்.
மறுமுனையில், கேப்டன் சூர்யகுமார் யாதவும் சிறப்பான இன்னிங்ஸை விளையாடி, 30 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில், ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஒரு முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார். இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் லாக்கி பெர்குசன் மற்றும் கைல் ஜேமிசன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மிடில் ஆர்டரில் தடுமாறிய நியூசிலாந்து:
இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி வலுவான தொடக்கத்தை அளித்தது. ஃபின் ஆலன் 38 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து அணிக்கு ஒரு உறுதியான தொடக்கத்தை அளித்தார். ரச்சின் ரவீந்திரனும் 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு, இந்திய பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்படவே, நியூசிலாந்து அணி 19-4 ஓவர்களில் 225 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை பயணத்தை தொடங்கவுள்ளது.
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்.. கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசி அர்ஷ்தீப் சிங் ஐந்து விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மூன்று விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.