Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WPL 2026: எலிமினேட்டருக்கு தகுதி பெறுமா மும்பை..? டெல்லிக்கு வாய்ப்புள்ளதா?

WPL 2026 Playoff Scenario: 2026 பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் (Delhi Capitals) டெல்லி கேபிடல்ஸ் vs UP வாரியர்ஸ் போட்டியின் முடிவை பொறுத்து எலிமினேட்டரில் குஜராத் அணியுடன் எந்த அணி மோதும் என்பது இறுதி செய்யப்படும். மகளிர் பிரீமியர் லீக் புள்ளிகள் அட்டவணை மற்றும் எலிமினேட்டர் போட்டியில் எந்த அணி மோதும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். 

WPL 2026: எலிமினேட்டருக்கு தகுதி பெறுமா மும்பை..? டெல்லிக்கு வாய்ப்புள்ளதா?
ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஹர்மன்ப்ரீத் கவுர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Jan 2026 15:21 PM IST

மகளிர் பிரீமியர் லீக்கில் (WPL 2026) நேற்று அதாவது 2026 ஜனவரி 30ம் தேதி நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பிளேஆஃப் இடத்தைப் பிடித்தது. இருப்பினும், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படவில்லை. 2026 பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் (Delhi Capitals) டெல்லி கேபிடல்ஸ் vs UP வாரியர்ஸ் போட்டியின் முடிவை பொறுத்து எலிமினேட்டரில் குஜராத் அணியுடன் எந்த அணி மோதும் என்பது இறுதி செய்யப்படும். மகளிர் பிரீமியர் லீக் புள்ளிகள் அட்டவணை மற்றும் எலிமினேட்டர் போட்டியில் எந்த அணி மோதும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பைனலில் ஆர்சிபி! வேறு எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்?

மகளிர் பிரீமியர் லீக் 4வது சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. இரட்டை ரவுண்ட் ராபின் முறையின் கீழ், ஒவ்வொரு அணியும் மற்ற நான்கு அணிகளுடன் இரண்டு போட்டிகளில் விளையாடும். லீக் ஸ்டேஜ் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தற்போதைய 4வது பதிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இப்படிதான். புள்ளிகள் பட்டியலில் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ள அணிகள் எலிமினேட்டரில் விளையாடுகின்றன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ள அணிகள் வெளியேற்றப்படும். எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதும்.

மகளிர் பிரீமியர் லீக் புள்ளிகள் அட்டவணை (19 போட்டிகளுக்குப் பிறகு)

  • RCB – போட்டிகள் – 8, வெற்றி – 6, தோல்வி – 2, புள்ளிகள் – 12, நிகர ரன் ரேட் – (+1.247)
  • GG – போட்டிகள் – 8, வெற்றி – 5, தோல்வி – 3, புள்ளிகள் – 10, நிகர ரன் ரேட் – (-0.168)
  • MI – போட்டிகள் – 8, வெற்றி – 3, தோல்வி – 5, புள்ளிகள் – 6, நிகர ரன் ரேட் – (+0.059)
  • DC- போட்டிகள்-7, வெற்றி-3, தோல்வி-4, புள்ளிகள்-6, நிகர ரன் ரேட் – (-0.164)
  • UPW- போட்டிகள்-7, வெற்றி-2, தோல்வி-5, புள்ளிகள்-4, நிகர ரன் ரேட்- (-1.146)

மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி தகுதி பெற முடியும்?

குஜராத் ஜெயண்ட்ஸிடம் தோல்வியடைந்த பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் vs UP வாரியர்ஸ் போட்டியை நம்பியுள்ளது. 2026 பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் போட்டியில் UP வாரியர்ஸ் டெல்லியை தோற்கடித்தால், மும்பை இந்தியன்ஸ் 3வது இடத்தைப் பிடிக்கும். டெல்லி மற்றும் மும்பை அணிகள் தலா 6 புள்ளிகளைப் பெற்றுள்ள.  ஆனால் நிகர ரன் ரேட் அடிப்படையில் மும்பை சிறப்பாக உள்ளது.

ALSO READ: முச்சல் மீது அடுக்கடுக்கான புகார்.. ஸ்மிருதி நண்பருக்கு எதிராக அவதூறு வழக்கு!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவை:

டெல்லி கேபிடல்ஸ் அணி ரன் வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் UP வாரியர்ஸை தோற்கடிக்க வேண்டும். ஒரு வெற்றி டெல்லிக்கு எட்டு புள்ளிகளைப் பெற்று, புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸை விட முன்னேறி, எலிமினேட்டருக்குத் தகுதி பெறும்.