Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs NZ 5th T20: 41 பந்துகளில் சதமடித்த இஷான் கிஷன்! இந்திய அணி 271 ரன்கள் குவிப்பு..!

Ishan kishan Fastest Century: நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் டி20 போட்டியில் இந்திய வீரர் இஷான் கிஷன் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. 

IND vs NZ 5th T20: 41 பந்துகளில் சதமடித்த இஷான் கிஷன்! இந்திய அணி 271 ரன்கள் குவிப்பு..!
இஷான் கிஷன் - ஹர்திக் பாண்ட்யாImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 31 Jan 2026 21:24 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் டி20 போட்டியில் இந்திய வீரர் இஷான் கிஷன் (Ishan Kishan) 41 பந்துகளில் சதம் அடித்து, 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இதன் காரணமாக, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா (Indian Cricket Team) எடுத்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். திருவனந்தரபுரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த இந்திய பேட்ஸ்மேன் இஷான் கிஷான் வெறும் 42 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்தார்.

ALSO READ: சொந்த ஊரில் விளையாட வந்த சாம்சன்.. விரட்டி விரட்டி கிண்டலடித்த சூர்யகுமார் யாதவ்.. வைரலாகும் வீடியோ!

கலக்கிய இந்திய அணி:


இந்திய அணிக்காக இஷான் கிஷன் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி சதம் அடித்த நிலையில், மறுபுறம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு, உள்ளே வந்த நட்ச்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வழக்கம்போல் அதிரடியாக விளையாடி வெறும் 17 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் இந்திய அனி 23 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகளை பறக்கவிட்டனர். அதேநேரத்தில், 3 நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர். இதில், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 4 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

271 ரன்கள் குவிப்பு:

ALSO READ: அரையிறுதிக்கு செல்லப்போகும் அணி எது..? மோதும் இந்தியா U19 -பாகிஸ்தான் U19..!

சஞ்சு சாம்சன் மீண்டும் சொதப்பல்:

இந்தத் தொடரில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்பட்டு வெறும் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 30 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் மீண்டும் ஏமாற்றம் அளித்தார். வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த பிறகு சாம்சன் பெவிலியன் செல்ல, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.