Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Winter Health Tips: குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு குளிரில் இருந்து பாதுகாப்பது எப்படி..? எளிய குறிப்புகள் இதோ!

Winter Child Care: இருமல் அல்லது தும்மும்போது குழந்தை தனது முழங்கையால் வாயை மூடக் கற்றுக் கொடுங்கள். இது பிற சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு காற்று வழி பரவும் நோய் தொற்றை தடுக்கும். அப்படி இல்லையென்றால், கைக்குட்டைகளை பயன்படுத்த பழக்கி விடுங்கள்.

Winter Health Tips: குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு குளிரில் இருந்து பாதுகாப்பது எப்படி..? எளிய குறிப்புகள் இதோ!
குளிர்கால குழந்தைகள் பராமரிப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Dec 2025 15:49 PM IST

கோடைகாலத்தில் கடுமையான வெப்பம் மட்டுமே தொந்தரவு என்றாலும், குளிர்காலத்தில் (Winter) வேறுபட்ட பிரச்சனைகளை தரும். அதிலும், குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு காய்ச்சல், சளி மற்றும் வயிற்று வலி போன்ற நோய்கள் உண்டாகும். எனவே குளிர் காலத்தில் அவர்களுக்கு கூடுதல் கவனிப்பு எடுத்து கொள்வது முக்கியம். வைரஸ்கள் குளிர்ந்த, வறண்ட காற்றில் நீண்ட காலம் உயிர்வாழ்வதால், குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி (Cold) எளிதில் பிடிக்கும். இது வீடு, பள்ளி போன்ற இடங்களில் தொற்றுகள் விரைவாக பரவ உதவுகிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பெற்றோர்கள் சில எளிய பழக்கங்களைப் பின்பற்றுவதன்மூலம், குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமியர்கள் நோய்வாய்ப்படாமல் பெருமளவில் பாதுகாக்கப்படலாம்.

ALSO READ: குளிர்காலத்தில் காலையில் இந்த உணவுகளா? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு!

குழந்தைகளை பாதுகாப்பது எப்படி..?

  • பள்ளிக்கு முன்பும், தூங்க செல்வதற்கு முன்பும் 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 3–5 நிமிடங்கள் ஆவி பிடிக்க செய்யலாம். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆவி பிடித்தல் என்பது ஆபத்தானது. குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்த பிறகும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் 20 வினாடிகள் சோப்பால் கைகளைக் கழுவுவதை பழக்கப்படுத்துங்கள்.
  • இருமல் அல்லது தும்மும்போது குழந்தை தனது முழங்கையால் வாயை மூடக் கற்றுக் கொடுங்கள். இது பிற சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு காற்று வழி பரவும் நோய் தொற்றை தடுக்கும். அப்படி இல்லையென்றால், கைக்குட்டைகளை பயன்படுத்த பழக்கி விடுங்கள். வீட்டிற்குள் எப்போதும் ப்ரஷான காற்று வருவதை உறுதி செய்ய, தினமும் காலையில் 10 நிமிடங்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து வைக்கவும்.
  • நம் வீட்டு பிள்ளைகளுக்கு ஒவ்வொரு உணவிலும் புரதம், அதிக காய்கறிகள் மற்றும் சூடான சூப்களை சேர்க்கவும். சிறியவர்கள் அதிகம் விரும்பும் முட்டை, பருப்பு, தயிர், பனீர் ஆகியவை புரதத்தின் நல்ல ஆதாரங்கள் உள்ளது.இதனை தினமும் கொடுத்து பழக்கப்படுத்தி கொள்ளலாம்.
  • கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, குடைமிளகாய் மற்றும் தக்காளி ஆகியவை வைட்டமின் சி-க்கு மிகவும் நல்லது. உடலுக்கு தேவையான துத்தநாகத்திற்கு பருப்பு மற்றும் பூசணி விதைகளை சாப்பிடும் உணவுகளில் கொடுக்கலாம்.
  • குளிர்காலத்தில் குழந்தைகள் குறைவாகவே தண்ணீர் குடிக்கிறார்கள், எனவே தண்ணீர் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
  • உங்கள் குழந்தையை தினமும் 30–45 நிமிடங்கள் தரையில் ஓடி ஆடி விளையாட விடுங்கள். வெளிப்புற காற்றின் தரம் மற்றும் சூழல் சரியாக இல்லையென்றால், வெளிப்புற விளையாட்டுகளுக்கு பதிலாக, ஸ்கிப்பிங் அல்லது யோகா போன்றவற்றை மேற்கொள்ள செய்யலாம்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் கொய்யாப்பழம் ஆரோக்கியமானதா? குளிர்காலத்தில் சாப்பிடலாமா?

  • சிறுவர்களின் மார்பு, கழுத்து மற்றும் காதுகளை குளிர்காலத்தில் வெளியே செல்லும்போது மூடி விடுங்கள். இது போதுமான பாதுகாப்பை வழங்கும்.
  • மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் ஜலதோஷத்திற்கு ஆன்டிபயாடிக் கொடுக்காதீர்கள். வீட்டில் எப்போதோ வாங்கிய மீதமுள்ள சிரப்பை ஒருபோதும் கொடுக்காதீர்கள். உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் இருந்தால் ஏராளமான சூடாக ஏதேனும் திரவங்களைக் கொடுங்கள்.
  • மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபன் கொடுப்பது நல்லது. சுவாசிப்பதில் சிரமம், அதிக காய்ச்சல் அல்லது காதுவலி போன்ற ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.