Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: ஆப்பிள் சீடர் வினிகரில் இத்தனை நன்மைகளா..? அடுக்கும் மருத்துவர் சரண் ஜேசி!

Apple Cider Vinegar Benefits: ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது என்று விளக்குகிறார். இன்சுலின் எதிர்ப்பு கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இன்சுலின் எதிர்ப்பு குறைவதால், கல்லீரலில் உள்ள கொழுப்பு படிவுகள் படிப்படியாகக் குறைகின்றன.

Health Tips: ஆப்பிள் சீடர் வினிகரில் இத்தனை நன்மைகளா..? அடுக்கும் மருத்துவர் சரண் ஜேசி!
மருத்துவர் சரண் ஜேசிImage Source: Freepik and instagram
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Dec 2025 21:03 PM IST

உடல் பருமன் பல நோய்களுக்குக் காரணமாக அமைந்து, சில நேரங்களில் இறப்புக்கும் வழிவகுக்கிறது. இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக, உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான மக்கள் உடல் பருமன் (Obesity) பிரச்சனையால் போராடி வருகின்றனர். விரைவாக உடல் எடையைக் குறைக்க மக்கள் பல்வேறு தந்திரங்களைப் பின்பற்றி வருகின்றனர். இது எதுவும் தீர்வை தருவது கிடையாது. இதற்கு பதிலாக, ஆப்பிள் சீடர் வினிகரை (Apple Cider Vinegar) உட்கொள்ளலாம். அதன்படி, ஆப்பிள் சீடர் வினிகரை மிதமாக குடிப்பது எடை குறைக்க வழிவகுக்கும்.  இருப்பினும், சில நேரங்களில், நன்மைகளுடன், இது சில தீமைகளையும் தரும் என்று மருத்துவர் சரண் ஜேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: வாழைப்பழம் சாப்பிட இதுவே சிறந்த நேரம்.. மருத்துவர் சரண் ஜேசி சூப்பர் டிப்ஸ்!

ஆரோக்கிய பானம்:

விரைவான எடையை குறைக்க வேண்டுமெனில் கலோரிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். பசியை அடக்கும் சில பானங்கள் உள்ளன. இவை எடையை குறைக்க வழிவகுக்கும். தற்போது, ​​மக்கள் விரைவாக எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக ஆப்பிள் சைடர் வினிகரையும் பயன்படுத்துகிறார்கள். எனவே அவற்றை எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்பதை அறிவது நல்லது.

ஆப்பிள் சீடர் வினிகரை எப்படி உட்கொள்வது..?

எடையை குறைக்க விரும்புவோர் அரை டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் அதிகப்படியான நுகர்வு தீங்கு விளைவிக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகள் என்ன?

 

View this post on Instagram

 

A post shared by Dr Charan J C (@drcharanjc)


ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது என்று விளக்குகிறார். இன்சுலின் எதிர்ப்பு கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இன்சுலின் எதிர்ப்பு குறைவதால், கல்லீரலில் உள்ள கொழுப்பு படிவுகள் படிப்படியாகக் குறைகின்றன. மறுபுறம், எலுமிச்சை உடலை நச்சு நீக்க உதவுகிறது. எனவே, இந்த பானத்தை உட்கொள்வது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

இதுமட்டுமின்றொ, ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, மேம்பட்ட செரிமானம், பால் குடிப்பவர்களுக்கு ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை, பாக்டீரியா பாதுகாப்பு, நச்சு நீக்கம் மற்றும் ஆரோக்கியமான தோல் மற்றும் முடி போன்ற நன்மைகளைக் கொண்டுள்ளது.

ALSO READ: சிறுநீரக கற்கள் மீண்டும் வருமோ என்ற பயமா..? வராமல் தடுக்க செய்ய வேண்டியவை..!

பக்கவிளைவுகள் என்னென்ன..?

  • ஆப்பிள் சீடர் வினிகரை தொடர்ந்து உட்கொள்வது பற்களின் எனாமலை, அதாவது மேல் அடுக்கை சேதப்படுத்தும். இது உணர்திறன் பிரச்சனையை அதிகரிக்கும்.
  • ஆப்பிள் சீடர் வினிகரின் அளவைக் கவனிக்காவிட்டால் அல்லது தொடர்ந்து உட்கொண்டால், அது அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.
  • ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும். ஏனெனில் அதில் அசிட்டிக் அமிலம் உள்ளது.
  • எந்த வகையான மருந்தை உட்கொள்பவர்களும் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது எதிர்வினையால் தீங்கு விளைவிக்கும்.