AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: பழைய உள்ளாடைகளை எத்தனை நாட்களில் மாற்ற வேண்டும்..? மருத்துவர் சௌரப் சேத்தி விளக்கம்!

Underwear Bacterial Infection Risk: உள்ளாடைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாலும், துவைப்பதாலும், துணியின் இழைகளில் சிறிய துளைகள் உருவாகின்றன. இந்த சிறிய துளைகளுக்குள் பாக்டீரியா, பூஞ்சை, இறந்த சருமம் மற்றும் உடல் திரவங்கள் சிக்கி கொள்ளும். இவற்றை சாதாரணமாக அலசி போடுவதால் முழுமையாக அகற்ற முடியாது. இது நாளடைவில் அழுக்கு துர்நாற்றம் மற்றும் தோல் தொற்றுகளை ஏற்படுத்தும்.

Health Tips: பழைய உள்ளாடைகளை எத்தனை நாட்களில் மாற்ற வேண்டும்..? மருத்துவர் சௌரப் சேத்தி விளக்கம்!
டாக்டர் சௌரப் சேத்திImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Feb 2026 18:38 PM IST

உள்ளாடைகள் நம் உடலுடன் தொடர்ந்து ஒட்டி கொண்டு இருக்கும் ஒரு ஆடை வகையாகும். சட்டை, பேண்ட் போன்ற வெளிப்புற ஆடைகளைப் போலல்லாமல் பிரா, பனியன்,  ஜட்டிகள் (Underwear) போன்ற உள்ளாடைகள் நேரடியாக வியர்வை, பாக்டீரியா, இறந்த உடல் செல்கள் மற்றும் உடல் துர்நாற்றத்தை சந்திக்கின்றன. பெரும்பாலான மக்கள் அவற்றைத் தொடர்ந்து துவைத்தாலும், தோல் ஆரோக்கிய (Skin Care) நிபுணர்கள் துவைப்பது மட்டும் போதாது, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் அல்லது வருடமும் உங்கள் உள்ளாடைகளை எத்தனை முறை மாற்ற வேண்டும் என்று ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற புகழ்பெற்ற இரைப்பை குடல் நிபுணர் மற்றும் கல்லீரல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாகுமா..? மருத்துவர் அருண்குமார் விளக்கம்!

பிற ஆடைகளை போல் இல்லாமல் உள்ளாடைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. அவை சுத்தமாகவும் நல்ல நிலையிலும் தோன்றினாலும், அவற்றை நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடாது. பொதுவாக ஒவ்வொரு 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை உள்ளாடைகளை மாற்றுவது நல்லது. காலப்போக்கில், துணியின் இழைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்றால், பாக்டீரியா மற்றும் பூஞ்சை செழிக்க சாதகமான சூழல் உருவானது என்று அர்த்தம். இதன்பிறகு, பயன்படுத்துவது தோல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும்.

பழைய உள்ளாடைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:

பழைய அல்லது சரியாக சுத்தம் செய்யப்படாத உள்ளாடைகளை அணிவது தோல் எரிச்சல், அரிப்பு, தொற்றுகள் மற்றும் பிற சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். அவற்றை தவறாமல் மாற்றுவது மிகவும் முக்கியம். அதன்படி, ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்கும் பிறகும் அவற்றை துவைத்து பயன்படுத்துவது நல்லது.

ALSO READ: வாய் புற்றுநோய் என்றால் என்ன? சிகிச்சை முறை என்ன? விளக்கும் மருத்துவர் ராஜசுந்தரம்!

ஏன் அடிக்கடி மாற்றுவது அவசியம்?


உள்ளாடைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாலும், துவைப்பதாலும், துணியின் இழைகளில் சிறிய துளைகள் உருவாகின்றன. இந்த சிறிய துளைகளுக்குள் பாக்டீரியா, பூஞ்சை, இறந்த சருமம் மற்றும் உடல் திரவங்கள் சிக்கி கொள்ளும். இவற்றை சாதாரணமாக அலசி போடுவதால் முழுமையாக அகற்ற முடியாது. இது நாளடைவில் அழுக்கு துர்நாற்றம் மற்றும் தோல் தொற்றுகளை ஏற்படுத்தும். உங்கள் உள்ளாடைகளை மாற்ற வேண்டிய நேரம் இது என்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. எலாஸ்டிக் தளர்வாகிவிட்டால், துணி மெல்லியதாகிவிட்டால், அல்லது சிறிய துளைகள் தோன்றினால், அதை மாற்ற வேண்டும். துவைத்த பிறகும் நீடிக்கும் பிடிவாதமான கறைகள் அல்லது துவைத்த பிறகும் நீடிக்கும் நாற்றம் ஆகியவை துணி அதன் தரத்தை இழந்துவிட்டதற்கான அறிகுறிகளாகும். மங்கலான நிறம் துணி மோசமடைந்து வருவதையும் குறிக்கிறது.