Parenting Tips: தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை கடிக்கிறதா? தடுக்க Dr. ஹரிணி ஸ்ரீ டிப்ஸ்!
Breastfeeding Tips: ஒரு தாய் தனது குழந்தையை தூக்கி பிடித்து தாய்ப்பால் (Breastfeeding) கொடுக்கும்போது இந்த தருணம் தாய்க்கும் குழந்தைக்கும் விலைமதிப்பற்ற உணர்வை தரும். ஆனால், சில நேரங்களில் குழந்தை தாய்ப்பால் கொடுக்கும்போது கடிக்கும்போது இந்த தருணம் தாய்க்கு சற்று வேதனையாக மாறும்.
எந்தவொரு தாய்க்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நேரம். தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தாய்க்கு மிகவும் முக்கியமானது. இதனால்தான், ஒரு தாய் தனது குழந்தையை தூக்கி பிடித்து தாய்ப்பால் (Breastfeeding) கொடுக்கும்போது இந்த தருணம் தாய்க்கும் குழந்தைக்கும் விலைமதிப்பற்ற உணர்வை தரும். ஆனால், சில நேரங்களில் குழந்தை (Childrens Care) தாய்ப்பால் கொடுக்கும்போது கடிக்கும்போது இந்த தருணம் தாய்க்கு சற்று வேதனையாக மாறும். இது கிட்டத்தட்ட ஒவ்வொரு தாயும் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான பிரச்சனையாகும். நீங்கள் இப்போதுதான் குழந்தையை பெற்று தாயாகி இந்த சூழ்நிலையை எதிர்கொண்டால், உங்களுக்காக குழந்தைகள் நல மருத்துவர் ஹரிணி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகள் ஏன் கடிக்கிறார்கள்..?
View this post on Instagram
தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகள் பற்களை கடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் குழந்தைகள் பால் குடிக்கும்போது போதுமான பால் சுரக்கப்படாதபோது, அவர்கள் முலைக்காம்பை கடுமையாக கடிக்கிறார்கள். இது தவிர, சில நேரங்களில் தாய் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகளை பார்க்காதபோது, குழந்தைகள் தாயின் கவனத்தை ஈர்க்க முலைக்காம்புகளை கடிக்க தொடங்குகிறார்கள். மேலும், சில நேரங்களில் குழந்தைகளுக்கு சளி இருந்தாலோ, பால் குடிக்க ஆர்வம் இல்லாமல் போனாலோ கடிக்க தொடங்குவார்கள்.




ALSO READ: குழந்தைகள் இருக்கும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கலாமா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!
சரியான நிலையில் தாய்ப்பால் கொடுப்பது எப்படி..?
தாய்ப்பால் கொடுக்கும்போது உங்கள் குழந்தை கடிக்காமல் இருக்க, உட்கார்ந்தோ அல்லது படுத்தோ எந்த நிலையில் சரியான நிலையில் தாய்ப்பால் கொடுங்கள். இது குழந்தைகளின் அசௌகரித்தை தடுக்கும். மேலும், உங்கள் குழந்தைக்கு பாலூட்டும்போது போதுமான பால் கிடைப்பதையும் உறுதி செய்யும். இதுவும் உங்கள் குழந்தை கடிப்பதற்கான அபாயத்தையும் குறைக்கும்.
குழந்தையின் மீது கவனம்:
பல நேரங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும்போது, டிவி அல்லது மொபைல் போன்கள் பார்க்க தொடங்குகிரார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் தங்கள் தாயின் கவனத்தை ஈர்க்க, முலைக்காம்புகளை கடிக்க தொடங்குவார்கள். அதன்படி, இவற்றை தடுக்க, பாலூட்டும்போது குழந்தையின் மீது உங்கள் கவனத்தை செலுத்தி, குழந்தையிடம் தொடர்ந்து பேசுங்கள் அல்லது தாலாட்டு பாடுங்கள். இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை இன்னும் மேம்படுத்தும்.