Health Tips: 90 சதவீத பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏன்..? எப்படி சரிசெய்யலாம்?
Vitamin D Deficiency: பெண்களில், 40 வயதிற்குப் பிறகு எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இந்த நேரத்தில் உடலுக்கு போதுமான வைட்டமின் டி கிடைக்கவில்லை என்றால், எலும்புகள் எளிதில் உடைந்து விடும். இந்த நிலை ஆஸ்டியோபோரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆராய்ச்சியின் படி, 90 சதவீத பெண்கள் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
இன்றைய நவீன வாழ்க்கையில் எல்லோரும் ஆரோக்கியமாக (Health) இருக்க விரும்புகிறார்கள். இதற்காக, பலரும் ஜிம்மிற்குச் சென்று ஆரோக்கியமான உணவுமுறை டயட்களை பின்பற்றுகிறார்கள். இதுமட்டுமின்றி, பல்வேறு சப்ளிமெண்ட்களையும் எடுத்துக்கொள்கிறார்கள். இருப்பினும், பல பெண்கள் இன்றைய காலக்கட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில், வைட்டமின் டி குறைபாடு (Vitamin D Deficiency) முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த வைட்டமின் ‘சூரிய ஒளி வைட்டமின்’ என்றும் அழைக்கப்படுகிறது.
வைட்டமின் டி குறைபாடு:
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் வைட்டமின் டி குறைபாடு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, கிட்டத்தட்ட 90 சதவீத பெண்களுக்கு வைட்டமின் டி அளவு இயல்பை விட குறைவாக உள்ளது. இதனால்தான் பெண்கள் எலும்பு வலி, பலவீனம், சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் சிறு வயதிலேயே அடிக்கடி ஏற்படும் நோய்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
ALSO READ: சர்க்கரை நோய்க்கு பயம் கொடுக்கும்.. இந்த 4 உணவு பொருட்கள் போதும்!




வைட்டமின் டி ஏன் முக்கியமானது?
வைட்டமின் டி நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது. இது உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை முறையாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இது பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. ஆய்வுகளின்படி, சரியான வைட்டமின் டி அளவு உள்ளவர்கள் சர்க்கரை, இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கும். இது பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பெண்களில் வைட்டமின் டி குறைபாடு ஏன் அதிகரித்து வருகிறது?
பெண்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ செலவிடுகிறார்கள். இதன் காரணமாக, பெண்களுக்கு வெயிலில் வெளியே செல்ல நேரம் கிடைப்பதில்லை. மேலும், பல பெண்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதில்லை. சைவ உணவுகளில் வைட்டமின் டி ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது உடலுக்கு அதிக வைட்டமின் டி தேவைப்படுகிறது. 40 வயதிற்குப் பிறகு எலும்பு அடர்த்தி படிப்படியாகக் குறைகிறது. இந்தக் காரணங்களினால், பெண்களில் வைட்டமின் டி குறைபாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
பெண்களில், 40 வயதிற்குப் பிறகு எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இந்த நேரத்தில் உடலுக்கு போதுமான வைட்டமின் டி கிடைக்கவில்லை என்றால், எலும்புகள் எளிதில் உடைந்து விடும். இந்த நிலை ஆஸ்டியோபோரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆராய்ச்சியின் படி, 90 சதவீத பெண்கள் பிரச்சனையை சந்திக்கின்றனர். இது ஆண்களுடன் ஒப்பிடும்போது எலும்பு முறிவு அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது.
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் என்னென்ன..?
உடலில் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு சோர்வு, பலவீனம், எலும்புகள், முதுகு, முழங்கால்களில் வலி, தசை பலவீனம் அல்லது பிடிப்புகள், எரிச்சல், சோகம் அல்லது மனச்சோர்வு, அடிக்கடி சளி, இருமல் அல்லது தொற்றுகள், அதிகப்படியான முடி உதிர்தல், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம். மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் வைட்டமின் டின் சாதாரண அளவு 20 முதல் 50 ng/ml வரை இருக்க வேண்டும். இதை விடக் குறைவாக இருந்தால், போதிய சிகிச்சை பெறுவது முக்கியம்.
ALSO READ: உங்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறதா? உடலில் இந்த வைட்டமின் குறைபாடு!
வைட்டமின் டி குறைபாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம்..?
வைட்டமின் டி குறைபாட்டை சரிசெய்ய தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரை 15-20 நிமிடங்கள் வெயிலில் செலவிடுவது நல்லது. இது மட்டுமின்றி முட்டையின் மஞ்சள் கரு, கொழுப்பு நிறைந்த மீன், பால், தயிர், பனீர், காளான்கள் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் செல்வது முக்கியம். தேவைப்பட்டால், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கலாம்.