வீக்கெண்டில் த்ரில்லர் படம் பார்க்கணும்னு நினைக்கிறீங்க? இந்த பாதிராத்திரி படத்தை மலையாள சினிமாவில் மிஸ் செய்யாதீர்கள்
Super Hit Thriller Movie Paathirathri OTT Update: மலையாள சினிமாவில் அனைத்து விதமான ஜானர்களும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக த்ரில்லர் பாணியில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பாதிராத்ரி படம் குறித்து தற்போது பார்க்கலாம்.
மலையாள சினிமாவைப் பொருத்தவரை அவர்கள் எந்த ஜானரில் படத்தை எடுத்தாலும் அது மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மலையாள சினிமாவைப் பொருத்தவரை ஃபீல் குட், த்ரில்லர், இன்வெஸ்டிகேஷன், ரொமாண்டிக் என அனைத்து ஜானர்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான படம் பாதிராத்திரி. இந்தப் படம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்த நிலையில் படத்தை இயக்குநர் ரதீனா பி.டி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் நவ்யா நாயர் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சன்னி வெய்ன், ஆன் அகஸ்டின், ஆத்மிய ராஜன், பூஜா மோகன்ராஜ், அச்யுத் குமார், ஹரிஸ்ரீ அசோகன், இந்திரன், ஷபரீஷ் வர்மா, தேஜஸ் இ.கே. ஜெயபிரகாஷ், பினு தொம்மன், சோஹன் சீனுலால், மணிக்குட்டன், அதுல்யா ஆஷாடம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஜீ 5 ஓடிடியில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஓடிடியில் வெளியான பாதிராத்திரி படம் எப்படி இருக்கிறது?
பாதிராத்திரி படத்தில் நடிகர்கள் நவ்யா நாயர் மற்றும் சௌபின் ஷாஹிர் இருவரும் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கையிலேயும் திருமண வாழ்க்கை சரியாக செல்லாமல் இருக்கும் நிலையில் வேலையில் இருக்கும் போது இவர்களுக்கு ஒரு நிகழ்வு நடைபெறுகின்றது. அதன்படி இவர்கள் இருவரும் டூட்டியில் இருக்கும் போது இரவு நேரத்தில் காட்டுக்கு நடுவில் இருந்த ஒரு காரை சோதனை செய்ய செல்கின்றனர். அந்த காரில் இருந்து ஒருவர் இறங்கி ஓட மற்றொரு நபர் காரைக் எடுத்துக்கொண்டு தப்பித்து விடுகிறார்.




Also Read… பிரதமர் மோடியை நேரில் சந்தித்து திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா !
காரில் இருந்து இறங்கி ஓடிய நபரை இருவரும் துறத்தி செல்லும்போது அவர் சதுப்புநில புதைகுழியில் விழுந்துவிடுகிறார். அதனைத் தொடர்ந்து அவரை தேடிச் சென்ற இவர்கள் இருவருக்கும் மேல் அதிகாரி வேறு ஒரு வழக்கிறகாக போன் செய்த நிலையில் அந்த இடத்தைவிட்டு செல்கின்றனர். அவர் உயிர் தப்பித்து இருப்பார் என்று நினைத்து இருந்த நிலையில் அவரின் உடல் இரண்டு நாட்களுக்குப் பிறகு கிடைக்கின்றது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இவர்கள் இருவரின் மீது பழி விழும் நிலையில் அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்களும் என்பதும் உண்மையான குற்றவாலிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.