Health Tips: முட்டை சாப்பிடுவதால் இருமல் குணமாகுமா..? சரிசெய்யும் எளிய முறைகள்!
Eggs Benefits of Cough: மழைக்காலத்தில் ஏற்படும் இருமலை சரிசெய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா..? முட்டையின் ஊட்டச்சத்து பண்புகள் உடலின் வலிமையை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, இருமலை விரைவாக குணப்படுத்தி ஆறுதலை தருகிறது.
 
                                முட்டைகள் (Eggs) ஒரு சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகின்றன. இவை அற்புதமான சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் ஏராளமாக கொண்டுள்ளன. முட்டையின் வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு என முழு முட்டையை சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும். முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு என இரண்டு முக்கிய பாகங்கள் உள்ளன. முட்டையின் வெள்ளைக்கரு முதன்மையாக புரதம் மற்றும் தண்ணீரால் ஆனது. அதேநேரத்தில் மஞ்சள் கருவில் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அந்தவகையில், முட்டைகள் இருமல் (Cough) மற்றும் சளிக்கு நேரடி மருந்து இல்லை என்றாலும், மழைக்காலத்தில் ஏற்படும் இருமலை சரிசெய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா..? முட்டையின் ஊட்டச்சத்து பண்புகள் உடலின் வலிமையை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, இருமலை விரைவாக குணப்படுத்துகிறது. முட்டைகள் அதிக புரதத்தின் மூலமாகும் மற்றும் உடலுக்குத் தேவையான சக்தியை வழங்குகின்றன. இது உடலை சளி அல்லது இருமலை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ALSO READ: வானிலை மாறும்போது குழந்தைகளுக்கு ஏன் டக்கென்று காய்ச்சல் வருகிறது..? காரணம் இதோ!
அதாவது, முட்டைகளில் வைட்டமின் டி, பி12 மற்றும் பிற வைட்டமின்கள் உள்ளன, அவை உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இது உடலில் வலிமையை அதிகரித்து, உடலின் இயற்கையான பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. இருமல் இருக்கும்போது வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், நிறைய எண்ணெயில் பொரித்த முட்டைகளைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை தொண்டையில் கனமாக இருக்கும்.




முட்டைகளை உட்கொள்ளும் போது, தொண்டையை ஈரப்பதமாக வைத்திருக்கவும், இருமலினால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கவும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த வைத்தியத்துடன், மஞ்சள் கலந்த சூடான பால், தேன்-எலுமிச்சை சாறு அல்லது துளசி மற்றும் தேன் கலவையை உட்கொள்வது இருமலுக்கு அதிக ஆறுதல் தரும்.இருப்பினும், இருமல் நீண்ட நேரம் நீடித்தால், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது பிற கடுமையான அறிகுறிகளுடன் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
ALSO READ: எலுமிச்சை விதைகளை தூக்கி எறிகிறீர்களா? அதில் உள்ள நன்மைகள் தெரியுமா?
முட்டைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- முட்டைகளில் உள்ள வைட்டமின்கள் ஏ,டி மற்றும் ஈ நிறைந்துள்ளது.
- கண், எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு முட்டை அவசியம்.
- முட்டையில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் போலேட்டின் பண்புகள் இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கும் மூளைக்கும் நன்மை பயக்கும்.
- முட்டைகளில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது.
- முட்டைகளில் உள்ள கோலின் மூளை வளர்ச்சிக்கும், கல்லீரல் செயல்பாட்டிற்கும் அவசியம்.
- முட்டைகளில் புரதச்சத்து இருப்பதால் தசை வளர்ச்சி மற்றும் உடல் மீட்சிக்கு சிறந்தது.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    