Monsoon Safety Tips: மழையில் இப்படி பைக்கை ஓட்டினால் விபத்து ஏற்படாது.. பாதுகாப்பு குறிப்புகள் இதோ..!
Rain Bike Driving Safety Tips: மழைக்காலங்களில் பைக் ஓட்டும் ஒவ்வொரு நபர்களும் மிகவும் கவனமாக பைக்கை ஓட்ட வேண்டும். சிறிய தவறு கூட ஒரு பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். மழை பார்வை திறனை மங்கலாக்குகிறது மற்றும் சாலைகளை (Roads) ஈரமாக்குகிறது.
இந்தியா முழுவதும் ஆங்காங்கே மழைக்காலம் (Monsoon) தொடங்கிவிட்டது. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் இரு சக்கர வாகன விபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரிக்கின்றன. நீங்கள் அடிக்கடி பைக் அல்லது ஸ்கூட்டரில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்த செய்தியை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம். அதாவது, மழைக்காலங்களில் பைக் ஓட்டும் ஒவ்வொரு நபர்களும் மிகவும் கவனமாக பைக்கை ஓட்ட வேண்டும். சிறிய தவறு கூட ஒரு பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். மழை பார்வை திறனை மங்கலாக்குகிறது மற்றும் சாலைகளை (Roads) ஈரமாக்குகிறது. இது பைக் சறுக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மழைக்காலங்களில் பாதுகாப்பான பைக் ஓட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: மழையில் வாகனம் ஓட்டுகிறீர்களா? இந்த விஷயங்களை தெரிந்து கொண்டால் விபத்தை தவிர்க்கலாம்!
ஹெல்மெட் அணிதல்:
கோடைக்காலத்தில் அதிக வெப்பம் இருப்பதால் பலர் ஹெல்மெட் அணிவதைத் தவிர்க்கிறார்கள். பருவத்தின் எந்த காலமாக இருந்தாலும் பைக் ஓடும்போது ஹெல்மெட் அணிவது மிக்இருப்பினும், மழைக்காலத்தில் நீங்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால், உங்கள் பைக் சறுக்கி விழுந்தால் நீங்கள் பலத்த காயமடைய நேரிடும். மழையின் போது சவாரி செய்யும் போது எப்போதும் ஹெல்மெட் அணியுங்கள். ஹெல்மெட் அணிவது மழைத்துளிகள் உங்கள் கண்களில் விழாமல் தடுக்கிறது, இதனால் பைக் ஓட்டுவது மிகவும் எளிதாகிறது.




தண்ணீர் தேங்கிய சாலைகளை தவிர்த்தல்:
மழைக்காலங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலும் தண்ணீர் தேங்கிய சாலைகளில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் அவ்வழியாக செல்லும்போது குழி இருப்பதை அறியாமல் சென்று விடுகிறார்கள். இதனால், கீழே விழுந்து காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தருகிறது. சாலை தேங்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இதுபோன்ற பாதைகளை தவிர்க்கவும். மேலும், இவ்வழியாக செல்லும்போது மழைநீர் பைக்கின் எஞ்சினுக்குள் புகுந்து, செலவுகளை ஏற்படுத்தக்கூடும்.
வேகத்தை குறைத்து கொள்ளுங்கள்:
மழை பெய்யும் போது அதிக வேகம் பைக்கை சறுக்குவதற்கு வழிவகுக்கும். எனவே, திருப்பங்கள் அல்லது ஈரமான சாலைகளில் உங்கள் வேகத்தை குறைவாக வைத்து, மித வேகத்தில் செல்வது பாதுகாப்பானது. மேலும், நேரான சாலைகளில் உங்கள் வேகத்தை அதிகரிக்காமல் குறைந்த வேகத்திலேயே செல்ல முயற்சி செய்யுங்கள்.
ALSO READ: புயல் அடிக்கும்போது வாகனத்தில் சிக்கி கொண்டீர்களா..? பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்?
ஹெட்லைட்:
மழை பெய்தால் சாலையில் பார்ப்பது கடினமாகிவிடும். கனமழையின்போது உங்கள் பைக்கில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஹெட்லைட்களை எரிய விடுங்கள். இது எதிரே வர வாகனங்களை அடையாளம் காண உதவி செய்யும். மேலும், மழையின்போது ஓரமாக நிறக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், உங்கள் வாகனத்தின் இண்டிகேட்டர்களை இயக்கி, மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுங்கள்.