Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Storm Safety Tips: புயல் அடிக்கும்போது வாகனத்தில் சிக்கி கொண்டீர்களா..? பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்?

Monsoon Storm Safety Tips: நீங்கள் காரிலோ அல்லது இருசக்கர வாகனத்திலோ பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென பலத்த புயல் அல்லது சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தால், அந்த நேரத்தில் மரத்தின் கீழ் நிற்க வேண்டும். இதுபோன்ற நேரத்தில். மின்னல் மரத்தை தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

Storm Safety Tips: புயல் அடிக்கும்போது வாகனத்தில் சிக்கி கொண்டீர்களா..? பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்?
புயலில் இருந்து பாதுகாப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 24 Oct 2025 16:09 PM IST

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் பருவமழை (Rainy Season) தொடங்கிட்டது. வெயில் காலத்தை கடந்த பிறகு பெய்யும் மழையானது எவ்வளவு நிம்மதியை தருகிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் தரும். கனமழை பெய்யும்போது மின்னல் தாக்குவது, மரங்கள் விழுவது போன்ற சம்பவங்கள் நிகழும். புயல் அல்லது சூறாவளியில் சிக்கினால் நீங்கள் பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் பலர் புயல்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். புயலின் போது மக்கள் பெரும்பாலும் மரங்கள் அல்லது மின் கம்பங்களுக்கு அடியில் நிற்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இது மாதிரியான தவறுகள் உயிரையும் பறிக்கலாம். இதுபோன்ற சூழலில் புயல், மின்னல்(Storm) மற்றும் சூறாவளியில்  சிக்கினால் நீங்கள் செய்யக்கூடாத சில தவறுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மழையில் வாகனம் ஓட்டுகிறீர்களா? இந்த விஷயங்களை தெரிந்து கொண்டால் விபத்தை தவிர்க்கலாம்!

மரத்திற்கு கீழ் நிற்க வேண்டாம்:

நீங்கள் காரிலோ அல்லது இருசக்கர வாகனத்திலோ பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென பலத்த புயல் அல்லது சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தால், அந்த நேரத்தில் மரத்தின் கீழ் நிற்க வேண்டும். இதுபோன்ற நேரத்தில். மின்னல் மரத்தை தாக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல், எக்காரணத்தை கொண்டும் மழை பெய்யும்போதும் உங்கள் மொபைல் போனையும் பயன்படுத்தக்கூடும். இதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் மின்னல் மற்றும் இடியை கவரக்கூடும்.

புயல் அல்லது கனமழையின் போது, ​​கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தின் கீழ் அல்லது மின் கம்பத்தின் கீழ் கூட நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

காரில் செல்லும்போது கனமழை பெய்தால் என்ன செய்யலாம்..?

வாகனம் ஓட்டும்போது பலத்த புயல் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்தால், உங்கள் வாகனத்தின் இண்டிகேட்டர்களை இயக்கியப்படி வாகனத்தை ஓரமாக நிறுத்துங்கள். ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளேயே அமர்ந்திருங்கள். எக்காரணத்தை கொண்டும் வெளியே வராதீர்கள். அதேபோல், வாகனத்தை கம்பங்கள், மரங்கள் அல்லது விளம்பரப் பலகைகளுக்கு அடியில் நிறுத்தாமல் முடிந்தவரை திறந்தவெளியில் நிறுத்துங்கள்.

ALSO READ: மின்னல் அடிக்கும்போது பயமா..? உங்களை எவ்வாறு பாதுகாப்பது..?

மேலும், புயலில் சிக்கினால், மின் கம்பிகள், மின்மாற்றிகள் அல்லது உயரமான பொருட்களின் அருகே நிற்பதைத் தவிர்க்கவும். பலத்த புயலின் போது இந்தப் பொருட்கள் உடைந்து விழக்கூடும். குறிப்பாக கவனமாக இருங்கள். மழைக்காலத்தின்போது புயல் அல்லது சூறாவளி அறிவிப்புகள் வந்தால் முடிந்தவரை வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருப்பது நல்லது. இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லது.