Rain Driving Tips: மழையில் வாகனம் ஓட்டுகிறீர்களா? இந்த விஷயங்களை தெரிந்து கொண்டால் விபத்தை தவிர்க்கலாம்!
Rainy Season Safe Driving: மழையில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருப்பது முக்கியம். தண்ணீர் தேங்கிய சாலைகளில் வாகனத்தை இயக்குவது என்பது பலருக்கும் சவாலான விஷயம். போக்குவரத்து நெரிசல்கள், உடைந்த வாகனங்கள் மற்றும் பள்ளங்களில் மறைந்திருக்கும் ஆபத்துகளைத் தவிர்க்க, நல்ல வைப்பர்கள் அல்லது வேகமாக ஓட்டுவது மட்டும் போதாது.

ஒவ்வொரு வருடத்தை போலவே, இந்த 2025ம் ஆண்டு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. பருவமழை (Monsoon) குளிர்ச்சியையும், நிம்மதியையும் மட்டுமல்ல, சில நேரங்களில் பல சிரமங்களையும் தரும். அதில் குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டுமென்றால், சாலைகளில் வாகனத்தை இயக்குவதாகும். மழையில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருப்பது முக்கியம். தண்ணீர் தேங்கிய சாலைகளில் வாகனத்தை இயக்குவது என்பது பலருக்கும் சவாலான விஷயம். போக்குவரத்து நெரிசல்கள், உடைந்த வாகனங்கள் மற்றும் பள்ளங்களில் மறைந்திருக்கும் ஆபத்துகளைத் தவிர்க்க, நல்ல வைப்பர்கள் அல்லது வேகமாக ஓட்டுவது மட்டும் போதாது. மழைக்காலத்தில் (Rainy Season) வாகனம் ஓட்டும்போது தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
தண்ணீர் தேங்கிய சாலைகளை தவிர்க்கலாம்:
சாலையில் தண்ணீர் இருந்தால், உங்களுக்கு முன்னால் இருப்பவர் சென்றால், அதையே பின்பற்றி நீங்களும் பாதுகாப்பாக சென்றுவிடலாம் என்று நினைக்க வேண்டாம். தண்ணீர் தேங்கிய சாலைகளில் வாகனத்தை இயக்கும்போது தண்ணீரானது எஞ்சின் அல்லது கார்ப்ரேட் குழாயில் நுழைந்து வாகனம் பயணத்தின் நடுவில் நின்றுவிடும். தண்ணீரின் ஆழம் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், அந்தச் சாலையைத் தவிர்க்கவும் அல்லது வேறு பாதையில் செல்லவும்.
ALSO READ: மழையில் ஸ்மார்ட் போன் நனைந்தால் என்ன செய்ய வேண்டும்..? சில முக்கிய குறிப்புகள்..!




தண்ணீரில் மூழ்கிய வாகனத்தை ஸ்டார்ட் செய்யாதீர்கள்:
உங்கள் வாகனம் நிறுத்தி தண்ணீரில் மூழ்கியிருந்தால், அதை ஸ்டார்ட் செய்ய முயற்சிப்பது மிகப்பெரிய தவறு. இது இயந்திரத்தை ஹைட்ரோலாக் ஆக வழிவகுக்கும், இதனால் இயந்திரம் சேதமடையக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், மெக்கானிக் ஷாப் சென்று வாகனத்தை இயக்குங்கள்.
டயர் க்ரிப்:
மழைக்காலங்களில் டயரின் க்ரிப் மிக முக்கியமானது. பழைய அல்லது தேய்ந்த டயர்கள் தண்ணீரில் நழுவி உங்கள் வாகனத்தின் சமநிலையை சீர்குலைக்கும். இதனால் உங்களுக்கு மிகப்பெரிய விபத்து ஏற்படலாம். உங்கள் டயரின் ட்ரெட் ஆழம் குறைந்தது 3 மிமீ இருக்க வேண்டும். உங்கள் டயர்கள் விரிசல் அல்லது தேய்மானம் அடைந்திருந்தால், அவற்றை உடனடியாக மாற்றவும்.
வைப்பர்களை பயன்படுத்துதல்:
மழையின் போது தெளிவான பார்வை மிக முக்கியமானது. தேய்ந்த வைப்பர் பிளேடுகள் உங்கள் பார்வைக்கு தெளிவை தராமல் போகலாம். மழைக்காலத்தின்போது வைப்பர்களை மாற்றி, விண்ட்ஷீல்ட் வாஷர் திரவத்தை சரியான நேரத்தில் நிரப்பி பயன்படுத்துவது பாதுகாப்பானது.
பனியை ஏற்படுத்தும்:
மழைக்காலத்தில், உள்ளேயும் வெளியேயும் உள்ள வெப்பநிலை வேறுபாடு ஜன்னல்களில் மூடுபனி ஏற்பட வழிவகுக்கும். ஏர் ப்ளோயரை நேரடியாக இயக்குவது இந்தப் பிரச்சனையை மோசமாக்கும். இதனால், தெளிவான பார்வை கிடைக்காமல் விபத்து நேரிடலாம். கவனத்துடன் இருப்பது முக்கியம்.
தண்ணீர் மற்றும் உணவுகள்:
மழைக்கால போக்குவரத்து நெரிசல்கள் எவருக்கும் எந்த நேரத்திலும் ஏற்படலாம். அதன்படி, மழைக்காலத்தில் உங்கள் காரில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சில ஸ்நாக்ஸ்களை வைக்கலாம். போக்குவரத்து நெரிசல்கள் உள்ள மணிநேரங்களில் கூட பசி அல்லது தாகத்தைத் தவிர்க்கலாம்.
ALSO READ: மின்னல் அடிக்கும்போது பயமா..? உங்களை எவ்வாறு பாதுகாப்பது..?
மரத்தடியில் நிறுத்த வேண்டாம்:
மழையின் போது மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்துவது ஆபத்தானது. ஏனெனில் பலத்த காற்று கிளைகளை உடைக்கலாம் அல்லது முழு மரத்தையும் விழச் செய்யலாம்.
அவசரகால எண்கள்:
உங்கள் வாகனம் புதியதாக இருந்தாலும் சரி, பழையதாக இருந்தாலும் சரி, மழைக்காலத்தின் போது எதுவும் நடக்கலாம். காப்பீடு, சர்வீஸ் சென்டர் எண்களை உங்கள் செல்போனில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். மழைக்காலத்தில் நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்தால், உங்கள் லோகேஷனை குடும்ப உறுப்பினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், எப்போதும் ஒரு பவர் பேங்கை எடுத்துச் செல்லுங்கள்.