Mobile Safety Tips: மழையில் ஸ்மார்ட் போன் நனைந்தால் என்ன செய்ய வேண்டும்..? சில முக்கிய குறிப்புகள்..!
Rainy Season Mobile Safety: மழைக்காலம் தொடங்கிவிட்டதால் நம் மொபைல் போன்களை பாதுகாக்க தரமான வாட்டர் ப்ரூஃப் மொபைல் கவர் அல்லது ஜிப்லாக் பையை வாங்கி வைத்து கொள்வது முக்கியமானது. நீங்கள் வெளியே செல்லும்போதெல்லாம், உங்கள் பையில் வைத்திருங்கள். இது போதுமான பாதுகாப்பை தரும்.

மழை பெய்யும்போது (Rainy Season) தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாம் எவ்வளவு நனைந்தாலும், நம் மொபைல் போன்கள் (Smart Phone) நனைவதை பெரும்பாலும் விரும்பமாட்டோம். ஏனென்றால் மழையில் நனைந்தால், ஸ்மார்ட்போன் சேதமடையும் அபாயம் அதிகம். அலுவலகம் அல்லது வெளியே செல்லும்போது வானிலை நன்றாக இருந்தாலும், திடீரென மழை பெய்தால் நாம் முதலில் பாதுகாப்பது நம்முடைய மொபைல் போனைதான். அந்த நேரத்தில், மொபைலைப் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுவோம். இதுபோன்ற சூழ்நிலைகளில் மழை பெய்யும்போது நமது ஸ்மார்ட் போன்களை எவ்வாறு பாதுகாப்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.
வாட்டர் ப்ரூஃப் கவர்கள்:
மழைக்காலம் தொடங்கிவிட்டதால் நம் மொபைல் போன்களை பாதுகாக்க தரமான வாட்டர் ப்ரூஃப் மொபைல் கவர் அல்லது ஜிப்லாக் பையை வாங்கி வைத்து கொள்வது முக்கியமானது. நீங்கள் வெளியே செல்லும்போதெல்லாம், உங்கள் பையில் வைத்திருங்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் மழையில் வெளியே சென்றாலும்.. அல்லது திடீரென மழை பெய்தாலும், எந்த பிரச்சினையும் இருக்காது. இதன்மூலம், உங்கள் ஸ்மார்ட் போன்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் வைக்க முடியும்.
ALSO READ: ஸ்மார்ட் டிவியை இப்படி ஸ்மார்ட்டாக யூஸ் பண்ணுங்க.. நீண்ட ஆண்டுகள் செலவு தராமல் சூப்பரா ஓடும்..!




ஈரமான கைகளால் போனை சார்ஜ் செய்யாதீர்கள்:
மழையில் நனைந்திருக்கும்போதோ அல்லது உங்கள் போன் நனைந்திருக்கும்போதோ உங்கள் போனை சார்ஜ் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் தண்ணீர் மற்றும் மின்சாரம் இணைந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே உங்கள் கைகள் அல்லது போனின் சார்ஜிங் போர்ட் ஈரமாக இருந்தால் அதை சார்ஜ் செய்யாமல் இருப்பது நல்லது. இதுபோன்ற நேரத்தில் சார்ஜ் போடும்போது போன் வெடிக்கலாம் அல்லது உங்களுக்கு ஷாக் கூட அடிக்கலாம்.
போன் நனைந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்..?
உங்கள் போன் மழையில் நனைந்து போய்விட்டால், உங்கள் போனை நனையாமல் பாதுகாக்க முடியாவிட்டால், உடனடியாக அதை ஸ்விட்ச் ஆஃப் செய்வது நல்லது. இதை தொடந்து, அரிசி அல்லது சிலிக்கா ஜெல் பாக்கெட்டில் 24 முதல் 48 மணி நேரம் வைக்கவும்.
நேரடியாக பயன்படுத்த வேண்டாம்:
உங்கள் ஸ்மார்ட்போன்கள் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருந்தாலும், மழையில் நனைந்துவிட்டால், எக்காரணத்தை கொண்டும் அதை உங்கள் காதில் நேரடியாக வைத்து போன் பேசுவது என்பது ஆபத்தானது. இதற்கு மாற்றாக, வயர்டு இயர்போன்கள் அல்லது புளூடூத் இயர்போன்களை பயன்படுத்துவது நல்லது.
ALSO READ: மழைக்காலத்தில் ஏசி வெப்பநிலை எவ்வளவு வைக்க வேண்டும்..? மின்சார கட்டணத்தைக் குறைக்கும் வழிகள்!
போன் சூடாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்..?
மழைக்காலத்தில் நம்மை சுற்றி எப்போது ஈரப்பதம் இருப்பதால் ஒரு சில ஸ்மார்ட்போன்கள் விரைவில் சூடாகிறது. எனவே, உங்கள் போனை சார்ஜ் செய்யும்போது மிகவும் சூடாக உணர்ந்தால், உடனடியாக சார்ஜ் செய்வதை நிறுத்த வேண்டும்.