Smart TV Safety Tips: ஸ்மார்ட் டிவியை இப்படி ஸ்மார்ட்டாக யூஸ் பண்ணுங்க.. நீண்ட ஆண்டுகள் செலவு தராமல் சூப்பரா ஓடும்..!
Smart TV Care Guide: பழைய டிவிகள் போல் இல்லாது ஸ்மார்ட் டிவி டிஸ்ப்ளே மென்மையானது. எனவே அதை சுத்தம் செய்யும் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஈரமான துணியைப் பயன்படுத்தி திரையை சுத்தம் செய்யக்கூடாது. இது ஸ்கிரினின் திறனை கெடுக்கும்.

இன்றைய நவீன வாழ்க்கையில் ஸ்மார்ட் டிவி (Smart TV) கிட்டத்தட்ட அனைவரது வீட்டிற்குள்ளும் வந்துவிட்டது. வாங்கும் ஸ்மார்ட் டிவி அதிக நீளத்திலும், அதிக அம்சங்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். அதன்படி, இதை வெறும் பொழுதுபோக்குக்காக (Entertainment) மட்டுமல்ல. பலர் அவற்றின் பிரமாண்டமான தோற்றத்தை வெளிப்படுத்தவும் வாங்குகிறார்கள். இப்போதெல்லாம், வாங்கும் ஸ்மார்ட் டிவிகளுக்கு ஏற்ற வகையில் அலமாரிகளையும் பிரமாண்டமாக வாங்கி அடுக்குகிறார்கள். இப்படி பார்த்து பார்த்து வாங்கும் ஸ்மார்ட் டிவிகளை நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் பெரிய சேதத்தை ஏற்படுத்தும். எனவே, அவற்றை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். எலக்ட்ரானிக் பொருட்களில் ஒரு சிறிய குறைபாடு கூட பெரிய சேதத்தை ஏற்படுத்தும். அதிலும், குறிப்பாக ஸ்மார்ட் டிவிகளைப் பயன்படுத்தும் போது, சில தவறுகளைச் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது.
அதன்படி, நீங்கள் வாங்கும் ஸ்மார்ட் டிவிகள் நீண்ட ஆண்கள் நன்றாக ஓட வேண்டும், எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.
வெயில் தாக்கம்:
எக்காரணத்தை கொண்டும் சூரிய ஒளி அல்லது அதிக வெப்பம் படும் இடத்தில் ஸ்மார்ட் டிவியை வைக்க வேண்டாம். எனவே, சூரிய ஒளி படும் இடத்தில் உங்கள் வீட்டில் ஸ்மார்ட் டிவி இருந்தால், சூரிய ஒளி படாமல் இருக்கும் இடத்திற்கு மாற்றுங்கள். அதிகப்படியான வெப்பம் டிஸ்ப்ளே பேனலை சேதப்படுத்தும். மேலும், இது உள் சேதத்தையும் ஏற்படுத்தும்.




ALSO READ: ஃபிரிட்ஜில் உணவுகளை எவ்வளவு நாள் வரை வைத்திருக்கலாம்? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
ஸ்டெபிலைசர்:
உங்கள் வீட்டில் அடிக்கடி மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தால், ஸ்மார்ட் டிவிக்கு கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் இருக்கும் வீடாக இருந்தால் ஸ்மார்ட் டிவிக்கு ஒரு ஸ்டெபிலைசரை வாங்கி மாட்டுங்கள். இதைப் பயன்படுத்துவதால் மின்னழுத்த சிக்கல்கள் குறையும். இல்லையெனில், திடீரென மின்னழுத்தம் குறைவதாலோ அல்லது அதிகரிப்பதாலோ டிவியின் உள் பாகங்கள் சேதமடையும். அதனால்தான் ஸ்டெபிலைசர் முக்கியமானது.
சுத்தம் செய்யும் போது கவனம்:
பழைய டிவிகள் போல் இல்லாது ஸ்மார்ட் டிவி டிஸ்ப்ளே மென்மையானது. எனவே அதை சுத்தம் செய்யும் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஈரமான துணியைப் பயன்படுத்தி திரையை சுத்தம் செய்யக்கூடாது. இது ஸ்கிரினின் திறனை கெடுக்கும். அதேபோல், கடைகளில் கிடைக்கும் இரசாயனங்களை நேரடியாக பயன்படுத்த வேண்டாம். அதாவது, திரையை சுத்தம் செய்யும் போது, திரையில் நேரடியாக கிளீனரை தெளிக்க வேண்டாம். முதலில் மைக்ரோஃபைபர் துணியில் கிளீனரை தெளித்து, பின்னர் திரையை மெதுவாக சுத்தம் செய்யவும். மேலும், திரையை கடுமையாக அழுத்தி துடைக்க வேண்டாம்.
காற்று புழக்கம் தேவை:
நீண்ட நேரம் டிவியைப் பயன்படுத்தும்போது, அது வெப்பத்தை வெளியிட தொடங்கும். எனவே, ஸ்மார்ட் டிவியின் பின்புறத்தில் காற்றோட்டத்திற்காக ஒரு இடைவெளியை விட்டு, காற்று புழக்கத்தை அனுமதிக்கவும். நீங்கள் டிவி வென்ட்களை போட்டிருந்தால் உடனடியாக மூட வேண்டாம். டிவியை சுவருக்கு மிக அருகில் பொருத்த வேண்டாம். டிவியை பொருத்துவதற்கு முன் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநரின் உதவியைப் பெறுங்கள்.
ALSO READ: வீட்டை மெல்ல மெல்ல அழிக்கிறதா கரையான்..? எளிதாக விரட்ட சூப்பரான பொருட்கள்!
ஸ்மார்ட் டிவிகள் ஒவ்வொரு வீட்டிலும் அவசியமானவை. ஆனால் அவற்றை கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், நீங்கள் அதிக செலவு செய்து ஒரு புதிய டிவியை வாங்க வேண்டியிருக்கும். எனவே, இந்த சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால், உங்கள் ஸ்மார்ட் டிவி நீண்ட காலம் நீடிக்க செய்து, பணத்தை மிச்சம் செய்யுங்கள்.