Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நல்ல தூக்கம் வேண்டுமாெ? பெட்ரூமில் இந்த நிறங்களை தவிருங்கள்

Experts Warn About Colors : மனிதர்களுக்கு தூக்கம் மிகவும் முக்கியம். தூக்கத்தில் ஏற்படும் பாதிப்புகள் நம் அன்றாட செயல்பாடுகளை பாதிக்கும். நம் அறையின் நிறங்கள் கூட தூக்கத்தை பாதிக்கலாம். இந்த கட்டுரையில் படுக்கையறையில் தவிர்க்க வேண்டிய நிறங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நல்ல தூக்கம் வேண்டுமாெ?  பெட்ரூமில் இந்த நிறங்களை தவிருங்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Aug 2025 22:50 PM

ஒவ்வொரு நிறமுக்கும் (Color) ஒரு குணம் இருக்கிறது. ஒரு நிறத்தின் குணாதிசயம் என்ன என்பதை தெரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும். உதாரணமாக சிவப்பு என்பது கோபம் மற்றும் வெப்பத்தை குறிக்கும். அதே போல கருப்பு என்பது துக்கத்தை குறிக்கக் கூடியது. வீடு கட்டும்போது, நிறங்களின் தன்மை குறித்து தெரிந்துகொண்ட பிறகு தேர்ந்தெடுப்பது நல்லது. சில நிறங்கள் நமக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். தூக்கம் என்பது மனிதருக்கு மிகவும் முக்கியம்.  இதனால் படுக்கையறைக்கு வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதும் மிகவும் முக்கியம். ஏனெனில் வண்ணங்கள் நமது தூக்கத்தையும் பாதிக்கின்றன. சில வண்ணங்களை படுக்கையறையில் பயன்படுத்தவே கூடாது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

படுக்கையறையில் தவிர்க்க வேண்டிய நிறங்கள்

மஞ்சள்

மஞ்சள் ஒரு பிரகாசமான நிறம். அது உற்சாகத்தைத் தருகிறது. ஆனால் அது படுக்கையறைக்கு நல்லதல்ல. மஞ்சள் நம் மூளையை காலை என்று நம்ப வைக்கிறது. இதன் காரணமாக, மூளை விழித்துக்கொள்ளும் என்பதால் தூக்கம் பாதிக்கும்.  நீங்கள் நன்றாக தூங்க விரும்பினால், மஞ்சள் நிறத்திலிருந்து விலகி இருப்பது நல்லது.

இதையும் படிக்க : ஈஸியாக கழிப்பறையை சுத்தம் செய்வது எப்படி..? பெரிதும் உதவும் வினிகர் முறை..!

சிவப்பு மற்றும் ஆரஞ்சு

பொதுவாக இந்த நிறங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியது . ஆனால் அவை படுக்கையறைக்கு ஏற்றவை அல்ல. சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்கள் நமக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக, சரியாக தூங்க முடியாது. இந்த நிறங்கள் சமையலறைகள் அல்லது அலுவலக அறைகளுக்கு நல்லது.

கருப்பு

கருப்பு எப்போதும் ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது. ஆனால் படுக்கையறையில் அதைப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல. கருப்பு நிறம் அறையை இருட்டாகவும் கனமாகவும் உணர வைக்கிறது. இது அறையில் ஒரு வகையான மனச்சோர்வு சூழ்நிலையை உருவாக்குகிறது. நீங்கள் கருப்பு நிறத்தைப் பயன்படுத்த விரும்பினால், அதை வெள்ளை நிறத்துடன் கலந்து கிரே வண்ணத்தில் பயன்படுத்துவது நல்லது.

இதையும் படிக்க : துணிகளை காய போடும்போது இந்த தவறுகள் வேண்டாம்.. இது உங்கள் துணிகளை நாசமாக்கும்..!

நீங்கள் எந்த நிறங்களைப் பயன்படுத்த வேண்டும் ?

படுக்கையறைக்கு அமைதியைத் தரும் வண்ணங்களைத் தேர்வு செய்யவும். வெளிர் நிறங்கள், நீலம், பச்சை போன்றவை நல்ல தூக்கத்திற்கு உதவுகின்றன மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குப் பிடித்த வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அவை அதிகம் உறுத்தாத வண்ணங்களாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. மனிதர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம். அதனால் அதனை பாதிக்கும் நிறங்களை தவிர்ப்பது நம் உடல் நலனுக்கும் நன்மை பயக்கும்.