Clean Kids Wall Marks: குழந்தைகளின் கைவண்ணத்தில் சுவற்றில் கிறுக்கல்களா..? எளிதாக எப்படி பளபளக்க செய்வது..?
Remove Kids Wall Scribbles: குழந்தைகள் வீட்டின் சுவர்களில் கிறுக்கி, வண்ணம் பூசி அழுக்காக்கியிருந்தால் கவலை வேண்டாம். சமையல் சோடா, வினிகர், மற்றும் மைக்ரோஃபைபர் துணி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி எளிதாக சுத்தம் செய்யலாம். ஆனால், பழைய கறைகளுக்கு தொழில்முறை உதவி தேவைப்படலாம்.

குழந்தைகள் (Childrens) வீட்டில் இருந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்குமோ, அதே அளவிற்கு அவர்கள் செய்யும் சேட்டைகளும் நமக்கு பெரிய தொல்லையாக மாறும். புதிதாக பிறந்த குழந்தை நடக்க தொடங்கிவிட்டாலே நாம், குழந்தைகளின் பின்னால் ஓடி கொண்டே இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எந்த நேரம் என்ன செய்வார்கள் என்று கவனமுடன் கையாள்வோம். இப்படி இருக்கும்போதுதான் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகள் தங்கள் கைகளில் கிடைப்பதை கொண்டு சுவற்றில் கிறுக்க (Marks on Walls) தொடங்குவார்கள். இது வீட்டின் அழகைக் குறைக்கிறது. உங்கள் குழந்தைகளும் வீட்டின் சுவர்களை வண்ணத்தால் அழுக்காக்கியிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது.
குழந்தைகளால் சுவற்றில் ஏற்பட்ட அழுக்குகளை எப்படி சுத்தம் செய்வது..?
உங்கள் வீட்டின் குழந்தைகளால் உங்கள் வீட்டின் சுவர்கள் ஆங்காங்கே அழுக்காக இருந்தால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் சொல்லும் சில குறிப்புகளை பின்பற்றினாலே போதும், இவற்றின் உதவியுடன் இந்த அழுக்குச் சுவர்களை மீண்டும் புதியது போல் எளிதாக மாறும். அதன்படி, இந்த குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசு தொல்லை.. குழந்தைகளுக்கு கொசு மருந்து பயன்படுத்தலாமா..?




சமையல் சோடா:
வீட்டில் எளிதாக கிடைக்கும் சமையல் சோடா உங்களுக்கு இந்த விஷயத்தில் பெரிதும் உதவும். இது கறைகளை எளிதாக அகற்ற கூடிய திறன் கொண்டது. அதன்படி, சுவரில் உள்ள அழுக்குகளை அகற்ற, பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இந்த கலவையை கறையின் மீது தடவி சில நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும். அதன்பின்னர், ஒரு ஈரமான துணியால் மெதுவாக தேய்க்கவும்.
இப்படி செய்வதன்மூலம், சுவர்களில் குழந்தைகள் வரைந்த மற்றும் கிறுக்கிய கோடுகள் மற்றும் வண்ணப்பூச்சுகள் நீங்கும். அதேபோல், பாத்திரம் கழுவும் சோப்புடன் எண்ணெய் மற்றும் கிரீஸை கலந்து கறையை நீக்க முயற்சிக்கலாம்.
வினிகர்:
சுவர்களில் இருந்து கறைகளை அகற்ற வினிகரைப் பயன்படுத்தலாம். வினிகர் ஒரு இயற்கையான சுத்தப்படுத்தியாகும், இது அழுக்குகளை அகற்றுவதில் பெரிதும் உதவுகிறது. உங்கள் வீட்டின் சுவற்றில் குழந்தை பென்சில் நிறத்தால் சுவர்களைக் கெடுத்திருந்தால், நீங்கள் வினிகரைப் பயன்படுத்தலாம். இதற்காக, கறை படிந்த இடங்களின் மீது வினிகரை தெளிக்கவும். இதை சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, மென்மையான துணி அல்லது பஞ்சை கொண்டு மெதுவாக தேய்த்தால் அழுக்குகள் மறையும்.
ALSO READ: உங்கள் குழந்தை டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறதா? எச்சரிக்கும் மருத்துவர்
மைக்ரோஃபைபர் துணி:
கறை லேசானதாக இருந்தால், நீங்கள் ஒரு மைக்ரோஃபைபர் துணியால் கறையை அகற்றலாம். இது மட்டுமல்லாமல், சந்தையில் பல வகையான கிளீனர்கள் கிடைக்கின்றன, அவை சுவர்களில் இருந்து பெயிண்ட் கறைகளை அகற்றுவதற்காக சிறப்பாக தயாரிக்கப்படுகின்றன.
சுவர்களில் உள்ள அழுக்குக் கறைகளை விரைவில் அகற்ற உதவும். சுவர் வண்ணப்பூச்சு மிகவும் பழையதாகவோ அல்லது கறை மிகவும் ஆழமாகவோ இருந்தால், அதற்கான தொழில்முறை நிபுணர்களை அழையுங்கள். இல்லையென்றால், புதிதாக வீட்டிற்கு வண்ணம் பூசுங்கள். இந்த குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம், வீட்டின் அழுக்குச் சுவர்களை எளிதாக சுத்தம் செய்யலாம்.